சினியோத் மாவட்டம்
சினியோத்
ضلع چنیوٹ | |
|---|---|
மாவட்டம் | |
மேல்:சாகி பள்ளிவாசல், சினியோத் கீழ்: அப்துஸ் சலாமின் கல்லறை | |
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சினியோத் மாவட்டத்தின் அமைவிடம் | |
| நாடு | |
| மாகாணம் | பஞ்சாப் |
| கோட்டம் | பைசலாபாத் |
| நிறுவிய ஆண்டு | 1 சூலை 2009 |
| தலைமையிடம் | சினியோத் |
| அரசு | |
| • வகை | மாவட்டம் (நிர்வாகி-துணை ஆணையாளர்) |
| பரப்பளவு | |
| • மாவட்டம் | 2,643 km2 (1,020 sq mi) |
| மக்கள்தொகை (2023)[1] | |
| • மாவட்டம் | 15,63,024 |
| • அடர்த்தி | 590/km2 (1,500/sq mi) |
| • நகர்ப்புறம் | 4,91,672 (31.45%) |
| • நாட்டுப்புறம் | 10,71,352 (68.55%) |
| எழுத்தறிவு | |
| • எழுத்தறிவு % |
|
| நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
| இடக் குறியீடு | 0466 |
| வருவாய் வட்டங்கள் | 3 |
| இணையதளம் | chiniot |
சினியோத் மாவட்டம் (Chiniot District), பாக்கித்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் 41 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் சினியோத் நகரம் ஆகும். சினியோத் நகரமானது, பஞ்சாப் மாகாணத் தலைநகரான லாகூருக்கு வடமேற்கே 162 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தெற்கே 278 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மாவட்ட எல்லைகள்
[தொகு]சினியோத் மாவட்டத்தின் வடக்கில் ஹபிசாபாத் மாவட்டம், கிழக்கில் பைசலாபாத் மாவட்டம், தெற்கில் ஜாங் மாவட்டம், மேற்கில் சர்கோதா மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 256,438 குடியிருப்புகள் கொண்ட மாவட்ட மக்கள் தொகை 1,563,024 ஆகும். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 102.41 ஆண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 55.05% ஆகும்.[1][3]இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 417,070 (26.68%) ஆக உள்ளனர்.[4]நகர்புறங்களில் 491,672 (31.46%) மக்கள் வாழ்கின்றனர்..[1]
சமயங்கள்
[தொகு]இம்மாவட்டத்தில் இசுலாம் சமயத்தை 95.35% மக்களும், அகமதியா சமயத்தை 4.3% மக்களும், கிறித்துவ சமயத்தை 0.33% மக்களும், பிற சமயங்களை 0.02% மக்களும் பின்பற்றுகின்றனர்.[5]
மொழிகள்
[தொகு]இம்மாவட்டத்தில் பஞ்சாபி மொழியை 95.08% மக்களும், உருது மொழியை 3.41% மக்களும், பஷ்தூ மொழியை 1.14% மக்களும் தாய் மொழியாகப் பேசுகின்றனர்[6]

மாவட்ட நிர்வாகம்
[தொகு]சினியோத் மாவட்டம் 3 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.
| வருவாய் வட்டம்[7] | பரப்பளவு
(km²)[8] |
மக்கள் தொகை
(2023) |
மக்கள்தொகை அடர்த்தி
(ppl/km²) (2023) |
எழுத்தறிவு %
(2023)[9] |
ஒன்றியக் குழுக்கள் |
|---|---|---|---|---|---|
| பவ்னா வட்டம் | 879 | 428,617 | 487.62 | 48.94% | ... |
| சினியோத் வட்டம் | 709 | 633,621 | 893.68 | 57.31% | ... |
| லாலியான் வட்டம் | 1,055 | 500,786 | 474.68 | 57.26% | ... |
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023" (PDF).
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 5" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 9" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "District Wise Results / Tables (Census - 2023)" (PDF). www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
- ↑ Divisions/Districts of Pakistan பரணிடப்பட்டது 2006-09-30 at the வந்தவழி இயந்திரம் Note: Although divisions as an administrative structure has been abolished, the election commission of Pakistan still groups districts under the division names
- ↑ "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).
- ↑ "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023" (PDF).