சினியா பிண்டோ
சினியா தெரசா கார்மென் பிண்டோ (Zinia Teresa Carmen Pinto) என்பவர் பாக்கித்தான் நாட்டின் கராச்சி நகரத்தில் பணிபுரியும் ஒரு ரோமன் கத்தோலிக்க கிறித்துவப் பெண் துறவியும் ஆசிரியரும் ஆவார். கோவாவில் 1929 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.
ஆரம்பகால வாழ்க்கை.
[தொகு]1929 ஆம்ம் ஆண்டு போர்த்துகீசிய கோவாவில் பிறந்தார். கோவாவில் உயர்நிலைப் பள்ளி முடித்த பிறகு, மும்பையின் புனித சேவியர் கல்லூரியில் தத்துவத்தில் இளங்கலை பட்டம் முடித்து பின்னர் ஆசிரியராகப் பயிற்சி பெற்றார்.[1]
1954 ஆம் ஆண்டு கராச்சி நகருக்கு வந்து 1956 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் புனித இயோசப் கன்னிமாடப் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார்.[2] பள்ளியில் 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் மற்றும் இலக்கியம் கற்பித்தார். 1957 ஆம் ஆண்டு டிசம்பரில் பள்ளியை விட்டு வெளியேறி தனது மதக் கல்வியைத் தொடங்கினார். 1958 ஆம் ஆண்டில் கத்தோலிக்க கிறித்துவ மத சகோதரிகள் அமைப்பில் சேர்ந்தார். மேலும் தனது மதக் கல்வியை முடிக்க பெல்ச்சியத்திற்குச் சென்றார்.
தொழில் வாழ்க்கை
[தொகு]திரும்பி வந்ததும் கராச்சி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார், மேலும் உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். புனித இயோசப் பள்ளியில் மீண்டும் சேர்ந்தார். தொடர்ந்து பாடங்கள் கற்பித்தார். இவர் புனித இயோசப் கல்லூரிக்கு உதவினார். 1963 ஆம் ஆண்டு சூன் மாதம் 1 அன்று பள்ளியின் முதல்வராக பதவியேற்றார். 1999 ஆம் ஆண்டு வரை இந்தப் பதவியில் தொடர்ந்தார்.
கராச்சி கத்தோலிக்க கல்வி வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார் . இவர் பெரும்பாலும் 6 மற்றும் 7 ஆம் வகுப்புகளுக்கு மத ஆய்வுகளை கற்பித்துள்ளார். இவரது பதவிக்காலத்தில் கணினிகளை அறிமுகப்படுத்திய முதல் பள்ளிகளில் புனித இயோசப் பள்ளியும் ஒன்றாகும். 2012 ஆம் ஆண்டில், இவர் பள்ளியின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.[3]
பாக்கித்தானில் கத்தோலிக்க கிறித்துவ மத சகோதரிகளின் மூத்த தாயாக பிண்டோ இருந்தார். ஒரு மாணவர் பள்ளியில் நடுவதற்காக 150 மரங்களை நன்கொடையாக வழங்கினார், மேலும் இவரது பெயரில் ஒரு சிறப்பு வேம்பு மரம், பள்ளியின் வரலாற்றில் தனது இடத்தைக் குறிக்கும்.[4] இவர் போப் இரண்டாம் இயான் பாலை 3 சந்தர்ப்பங்களில் சந்தித்தார், மேலும் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 அன்று கராச்சியில் அவர் கொண்டாடிய பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்..[5]
மரணமும் மரபும்
[தொகு]உடல்நிலை பாதிக்கப்பட்டு புனித குடும்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவர் ஜூன் 4,2013 ஆம் ஆண்டு சூன் மாதம் 4 ஆம் தேதியன்று இறந்தார். இவரது இறுதிச் சடங்கு சூன் மாதம் 6 அன்று புனித பேட்ரிக் கதீட்ரலில் நடந்தது. தேசியமயமாக்கலும் தனியார்மயமாக்கலும் மற்றும் பள்ளிகளின் வணிகமயமாக்கலும் நிகழ்ந்து நாட்டின் கல்வி கட்டமைப்பை அழித்த ஒரு காலகட்டத்தில் இவர் பள்ளியை வழிநடத்தினார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Profile, The Express Tribune, 6 June 2013.
- ↑ Dawn 28 March 2012
- ↑ St Joseph's Convent School website, sjc.edu.pk; accessed 19 April 2012.
பரணிடப்பட்டது 5 சூலை 2012 at the வந்தவழி இயந்திரம் - ↑ Profile, The Express Tribune, 20 March 2012.
- ↑ The Herald, May 2005
- ↑ Dawn Obituary, dawn.com, 9 October 2013.