உள்ளடக்கத்துக்குச் செல்

சினிமாப் பைத்தியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சினிமாப் பைத்தியம்
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புஏ. எல். சீனிவாசன்
ஏ. எல். எஸ் புரொடக்சன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
கமல்ஹாசன்
ஜெயசித்ரா
ஒளிப்பதிவுவி. செல்வராஜ்
படத்தொகுப்புவி. பி. கிருஷ்ணன்
வெளியீடுசனவரி 31, 1975
நீளம்4347 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சினிமாப் பைத்தியம் (Cinema Paithiyam) என்பது 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கமல்ஹாசன், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2] இது குட்டி (1971) என்ற இந்தி திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும்.[3] இப்படம் 31 சனவரி 1975 இல் வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

கதை

[தொகு]

ஜெயா (ஜெயசித்ரா) ஒரு திரைப்பட இரசிகை. திரைப்படத்தின் மீது மிகுந்த மோகம் கொண்டவள். பிரபல நடிகரான ஜெய்சங்கரின் தாவிர இரசிகை. திரையில் அவர் செய்வதை எல்லாம் உண்மை என நம்புகிறாள். அவர் பெயரை கையில் பச்சைக் குத்திக் கொள்ளுமளவுக்கு பைத்தியமாக உள்ளாள். சமூக சீர்கேட்டுக்கு திரைப்படம் ஒரு காரணம் என்று நம்புபவர் ஜெயாவின் அண்ணனான சிவலிங்கம் (மேஜர் சுந்தரராஜன்) ஒரு காவல்துறை அதிகாரியாவார். ஆனால் ஜெயாவுக்கு மிகுந்த செல்லம் கொடுத்து அண்ணி இலட்சுமி (சௌகார் ஜானகி) வளர்க்கிறார். தங்கை ஜெயாவை லட்சுமியின் தம்பி நடராஜுக்கு திருமணம் செய்விக்க சிவலிங்கம் விரும்புகிறார். ஆனால் அதற்கு ஜெயா உடன்படவில்லை. திரைப்படம் ஒரு மாயை என்பதை அவளுக்கு உணர்ந்து நிஜவாழ்கைக்கு ஜெயா எப்படித் திரும்புகிறாள் என்பதே கதை.

நடிகர்கள்

[தொகு]

சிறப்புத் தோற்றம்

பாடல்கள்

[தொகு]

சங்கர் கணேஷ் அவர்களால் பாடல், இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல்களும் கண்ணதாசன்னால் எழுதப்பட்டது.

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
1 "என் உள்ளம் அழகான" வாணி ஜெயராம் கண்ணதாசன்
2 "நான் அறியாத" டி. எம். சௌந்தரராஜன்
3 "ஐ வில் செல் மை பியூட்டி" எல். ஆர். ஈஸ்வரி

தயாரிப்பு

[தொகு]

இந்தப் படத்தின் கதை ம. கோ. இராமச்சந்திரனைக் குறிப்பதாகக் கருதி, இப்படத்தை இயக்கவும், நடிக்கவும் முதலில் யாரும் முன்வரவில்லை. ஆனால் இது சொல்லவேண்டிய கதை என்று முக்தா சீனிவாசன் முன்வந்தார். இந்தப் படத்தின் உட்சபட்சக் காட்சி முடிந்ததும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கா. ந. அண்ணாதுரை திரைப்படங்களின் மையக் கருத்து சமுதாய நலனுக்காக இருக்கவேண்டும் என்று அறிவுரை கூறுவதோடு படம் முடியும்.[6]

வெளியீடும் வரவேற்பும்

[தொகு]

சினிமாப் பைத்தியம் 31 சனவரி 1975 அன்று வெளியானது.[7] கல்கியின் காந்தன் படத்தை இந்தியின் அசல் படத்துடன் ஒப்பிட்டு நேர்மறையான விமர்சனத்தைத் தந்தார்.[8] குமுதம் கமல்ஹாசன், ஜெயசித்ரா, சௌகார் ஜானகி ஆகியோரின் நடிப்பைப் பாராட்டியதுடன், அசல்படமான குட்டி இனிமையாக இருந்தது; சினிமாப் பைத்தியத்தில் அது இல்லை என்றது.[9] ஜெயசித்ரா பின்னர் ஒரு செவ்வியில், இந்தப் படம் சென்னையில் உள்ள தேவி-ஸ்ரீதேவி வளாகத்தில் 100 நாட்கள் ஓடியது என்றும், "அந்த திரையரங்க வளாகத்தில் இவ்வளவு காலம் ஓடிய முதல் தமிழ் கருப்பு வெள்ளைப் படம் இதுதான்" என்றும் கூறினார்.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மறக்க முடியுமா...? சினிமாப் பைத்தியம்". தினமலர். 7 மே 2020. Retrieved 25 ஆகஸ்ட் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "'ஜேம்ஸ்பாண்ட்' ஜெய்சங்கர்... வெள்ளிக்கிழமை ஹீரோ... மக்கள் கலைஞர்! - நடிகர் ஜெய்சங்கர் நினைவு நாள் இன்று". இந்து தமிழ். 3 சூன் 2020. Retrieved 15 மே 2021.
  3. Sampath, Janani (27 August 2013). "The common man's film maker". தி நியூ இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 2 March 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200302043833/https://www.newindianexpress.com/entertainment/tamil/2013/aug/27/The-common-mans-film-maker-510849.html. 
  4. "எம்ஜிஆர் 4, சிவாஜி 8, கமல் 10 - 75ம் வருட ப்ளாஷ்பேக்". இந்து தமிழ். 22 ஆகஸ்ட் 2019. Retrieved 13 சனவரி 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. "எங்க வீட்டுக்கு வந்துடுங்கன்னு எல்லாரும் கூப்பிடுறாங்க! - 'சுந்தரி' அப்பத்தா வரலட்சுமி". ஆனந்த விகடன். 19 ஏப்ரல் 2021. Retrieved 15 மே 2021.
  6. "சினிமா பைத்தியம்: காமராஜர் பார்த்த கடைசி படம்". 2024-01-31. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  7. "ஜனவரி 31ம் தேதியில் வெளியான படங்கள்..." [Films released on 31 January...]. Screen 4 Screen. 31 January 2021. Archived from the original on 19 November 2023. Retrieved 20 August 2022.
  8. காந்தன் (16 February 1975). "சினிமா பைத்தியம்". Kalki. p. 61. Archived from the original on 27 July 2022. Retrieved 14 March 2022.
  9. "சினிமா பைத்தியம்". குமுதம் (இதழ்). 13 February 1975. pp. 4–5. Archived from the original on 3 January 2024. Retrieved 3 January 2024 – via இணைய ஆவணகம்.
  10. Sri (8 March 2008). "Retrospect : Kalpana (1977)". Telugucinema.com. Archived from the original on 12 March 2008. Retrieved 14 March 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சினிமாப்_பைத்தியம்&oldid=4152762" இலிருந்து மீள்விக்கப்பட்டது