சினதுன் தாலுக்தார்
சினதுன் நேசா தாலுக்தார் ZinatunNesaTalukdar | |
---|---|
জিনাতুননেসাতালুকদার | |
முதன்மை மற்றும் அனைவருக்குமான கல்வி அமைச்சகம் | |
பதவியில் 1 சனவரி 1998 – 15 சூலை 2001 | |
துணை அமைச்சர், முதன்மை மற்றும் அனைவருக்குமான கல்வி அமைச்சகம் | |
பதவியில் 23 சூன் 1996 – 31 திசம்பர் 1997 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1947 |
இறப்பு | (அகவை 76) டாக்கா, வங்காளதேசம் |
தேசியம் | வங்காளதேசம் |
அரசியல் கட்சி | அவாமி லீக் |
புனைப்பெயர் | சினத்துன்நேசா |
சினதுன் நேசா தாலுக்தார் (ZinnatunnessaTalukdar) வங்காளதேசத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1947 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். வங்காளதேசத்தைச் சேர்ந்த சமயச்சார்பற்ற முன்னணி அரசியல் கட்சியான அவாமி லீக் கட்சியின் அரசியல்வாதியாக இவர் செயல்பட்டார். முதன்மை மற்றும் அனைவருக்குமான கல்வித்துறையின் மாநில அமைச்சராக இருந்தார்..[1] பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்களுக்கான மாநில அமைச்சராகவும் பணியாற்றினார். 1996-2001 ஆம் ஆண்டுகளில் சேக் அசீனா அமைச்சரவையில் இருந்த 43 அமைச்சரவை அமைச்சர்களில் இருந்த மூன்று பெண் அமைச்சர்களில் இவரும் ஒருவராவார்.[2][3]
சினதுன் நேசா தாலுக்தாருக்கு வங்காளதேச அரசாங்கம் 2018 ஆம் ஆண்டில் பெண்களின் தனிப்பட்ட சாதனைகளுக்காக வழங்கப்படும் பேகம் ரோக்கியா பதக்கத்தை வழங்கி சிறப்பித்தது.[4]
இறப்பு
[தொகு]சினதுன் நேசா தாலுக்தார் இதயம் மற்றும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு டாக்காவில் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதியன்று தனது 76 ஆவது வயதில் இறந்தார்[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "6 new ministers take oath, 2 promoted". The Daily Star. 1 January 1998. பார்க்கப்பட்ட நாள் 9 October 2016.
- ↑ "Representation of women reduced to half". GulfNews. 14 October 2001. பார்க்கப்பட்ட நாள் 9 October 2016.
- ↑ "Achievements - Rajshahi Chamber of Commerce & Industry". Rajshahi Chamber of Commerce & Industry. Archived from the original on 26 October 2016. பார்க்கப்பட்ட நாள் 9 October 2016.
- ↑ "Be responsible towards family". The Daily Star (in ஆங்கிலம்). 10 December 2018. பார்க்கப்பட்ட நாள் 9 December 2019.
- ↑ "Former state minister Zinatunnesa Talukdar passes away | News". BSS. பார்க்கப்பட்ட நாள் 29 October 2023.