சிந்து பொறியியல் கல்லூரி, கோயமுத்தூர்
சிந்து பொறியியல் கல்லூரி | |
வகை | பொறியியல் |
---|---|
உருவாக்கம் | 2008 |
தலைவர் | வி. பி. பிரபாகரன் |
முதல்வர் | முனைவர் ஆர். ரெங்கராஜன் |
பணிப்பாளர் | வி. பி. சிவகுமார் |
மாணவர்கள் | 856 |
அமைவிடம் | , , 10°56′05″N 76°47′42″E / 10.934613°N 76.794945°E |
வளாகம் | சிந்து சமவெளி, கலிமங்கலம், ஆலந்துறை கிராமம், கோயம்புத்தூர், தமிழ்நாடு, 64110, India |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | link |
சிந்து பொறியியல் கல்லூரி (Indus College of Engineering Coimbatore)
- இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயம்புத்தூரின், புறநகரில், மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும், இந்தக் கல்லூரி 2008 இல் நிறுவப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
வரலாறு[தொகு]
சிந்து பொறியியல் கல்லூரி, 2008 ஆம் ஆண்டில், சிந்து கல்வி அறக்கட்டளையால் திரு வி. பி. பிரபாகரனால் நிறுவப்பட்டது.
2009 ஆம் ஆண்டில், இக்கல்லூரி ஐ.எசு.ஓ 9000 சான்றளிக்கப்பட்ட நிறுவனமாக மாறியது. 2011 ஆம் ஆண்டில் , கோயம்புத்தூர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் இந்தக் கல்லூரி, ஆராய்ச்சி மையமாக அடையாளம் காணப்பட்டது.
படிப்புகள்[தொகு]
இளநிலைப் படிப்புகள்[தொகு]
- இளங்கலைப் பொறியியல்
- பி.இ. இயந்திரப் பொறியியல்
- பி.இ. குடிசார் பொறியியல்
- பி.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- பி.இ. தகவல் தொழில்நுட்பம்
- பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல்
- பி.இ. மின் மற்றும் மின்னணுப் பொறியியல்.
முதுநிலைப் படிப்புகள்[தொகு]
- முதுநிலைப் பொறியியல்
- எம்.இ. அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ்
- முதுகலை வணிக மேலாண்மை (எம்.பி.ஏ.)
- ஆய்வுப் படிப்புகள்
- மேலாண்மையில் பி.எச்.டி..