சிந்துபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிந்துபுரம் என்பது இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வட்டுக்கோட்டையில் இருக்கும் ஒரு பழமையும் கலையும் கோவில்களும் நிறைந்த ஒரு கிராமமாகும். கிபி 1638 இற்குப் பின் போர்த்துக்கேயர் காலத்தில் இங்கு குடியிருப்புக்கள் ஏற்பட்டது.

சிந்து வெளி நாகரீகத்தை பூர்விகமாகக்கொண்ட மக்களால் ஏற்படுத்தப்பட்ட குடியிருப்பு என்றபடியால் சிந்துபுரம் என்று இக்கிராமத்திற்கு பெயர் வந்தது என்று சொல்லப்படுகிறது. நாட்டுக்கூத்தும் நாட்டு மருத்துவமும் இந்தக் கிராமத்தின் சிறப்புகள் ஆகும். பல கல்விமான்களும் மருத்துவர்களும் கவிஞர்களும் கலைஞர்களும் இங்கு பிறந்துள்ளனர். இலங்கையின் நாட்டுப்பண்ணை இயற்றிய முதுதமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி இந்தக் கிராமத்தில் பிறந்தவர். போத்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் இங்கு சைவக்கோவில்கள் பெரிதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியது. எனினும் இவ்வூர்மக்களின் போராட்டங்களினாலும், தியாகங்களினாலும் கோவில்கள் தப்பியது. இந்தக்கிராமத்தின் தனித்துவமான நாட்டுக்கூத்து பல தலைமுறைகளாக ஆடப்பட்டு வருகின்றது சிறப்பாகும். புராண, இதிகாச நாட்டுக்கூத்துக்கள் இன்றும் ஆடப்பட்டு வருவது தமிழ் கூறும் நல்லுழகில் இங்கு மட்டுமே. 1907 ஆண்டிற்கு முன்பிருந்தே இக்கிராமம் சிந்துபுரம் என்று அழைக்கப்பட்டு வருகிறது என்பதற்கு ஆதாரங்கள் இருக்கிறது. எனினும் இடைபட்ட காலங்களில் வேறு சில பெயர்கள் கொண்டும் இக்கிராமம் அழைக்கப்பட்டது. எனினும் சிந்துபுரம் எனும் இதன் பழமை வாய்ந்த பெயர் மீண்டும் இவ்வூர் மக்களின் பெருமுயற்சியால் நிலைநாட்டப்பட்டு விட்டது.

அமைவிடம்[தொகு]

யாழ்நகரில் இருந்து 7கி.மீ தூரம் வட மேற்கில்.9°443"42'அகலாங்கிலும் 79°57"7"நெட்டாங்கிலுமாக சிந்துபுரத்தின் மையம் அமைந்துள்ளது. வடக்கே சித்தங்கேணியும் கிழக்கே தாவடியும் மேற்கே சுழிபுரமும், தெற்கே மூளாய்ப்பகுதியும் இதன் எல்லைகளாகும். சிந்துபுரம் கிராம இணையத்தளம் பரணிடப்பட்டது 2020-10-13 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்துபுரம்&oldid=3244193" இருந்து மீள்விக்கப்பட்டது