சிந்தியா மெக்கினி
Cynthia McKinney சிந்தியா மெக்கினி | |
---|---|
![]() | |
ஜோர்ஜியாவின் 11ஆம் சட்டமன்ற மாவட்டத்திலிருந்து கீழவை உறுப்பினர் | |
பதவியில் ஜனவரி 5, 1993 – ஜனவரி 3, 1997 | |
முன்னவர் | யாரும் இல்லை - மாவட்டம் உருவாக்கப்பட்டது |
பின்வந்தவர் | ஜான் லின்டர் |
ஜோர்ஜியாவின் 14ஆம் சட்டமன்ற மாவட்டத்திலிருந்து கீழவை உறுப்பினர் | |
பதவியில் ஜனவரி 7, 1997 – ஜனவரி 3, 2003 | |
முன்னவர் | ஜான் லின்டர் |
பின்வந்தவர் | டெனீஸ் மஜெட் |
ஜோர்ஜியாவின் 4ஆம் சட்டமன்ற மாவட்டத்திலிருந்து கீழவை உறுப்பினர் | |
பதவியில் ஜனவரி 3, 2005 – ஜனவரி 3, 2007 | |
முன்னவர் | டெனீஸ் மஜெட் |
பின்வந்தவர் | ஹேங்க் ஜான்சன் |
தனிநபர் தகவல் | |
அரசியல் கட்சி | மக்களாட்சி (ஜனவரி 1993 – செப்டம்பர் 2007) பசுமைக் கட்சி (அக்டோபர் 2007 - இன்று) |
வாழ்க்கை துணைவர்(கள்) | கோய் கிராண்டிசன் (மண முறிந்தது) |
இருப்பிடம் | லைத்தோனியா, ஜோர்ஜியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் |
பணி | உயர்பள்ளி ஆசிரியர், கல்லூரி பேராசிரியர் |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
சிந்தியா ஏன் மெக்கினி (Cynthia Ann McKinney, பிறப்பு மார்ச் 17, 1955) 2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பசுமைக் கட்சி சார்பில் வேட்பாளர் ஆவார். 1993 முதல் 2003 வரையும் 2005 முதல் 2007 வரையும் மக்களாட்சிக் கட்சியை சேர்ந்து ஜோர்ஜியாவின் 4ஆம் மற்றும் 11ஆம் சட்டமன்ற மாவட்டங்களின் மக்களின் சார்பில் கீழவையில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார். கீழவையில் ஜோர்ஜியாவை பிரதிநிதித்த முதலாம் ஆபிரிக்க அமெரிக்க பெண் ஆவார். 2007இல் டிசம்பர் 11ஆம் தேதி மெக்கினி பசுமைக் கட்சியை சேர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.