சிந்தன விதானகே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிந்தன விதானகே

சிந்தன விதானகே இலங்கையைச் சேர்ந்த ஓர் எடை தூக்கும் வீரர். இவரது சொந்த இடம் பொலன்னறுவையாகும். இவர் 2002 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற கொமன்வெலத் போட்டியில் எடை தூக்கும் பிரிவில் 4வது இடத்தை பெற்றுள்ளார். 2006 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் நடந்த 16 வது கொமன்வெலத் விளையாட்டுப்போட்டியில் 65 கிலோ எடை தூக்கும் பிரிவில் இலங்கை சார்பாக கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்றார். இப்பதக்கமே இந்த விளையாட்டுப் போட்டியில் இலங்கை பெற்ற ஒரே ஒரு பதக்கம் ஆகும். இவரின் திறமையைப் பாராட்டி இவருக்கு அவுஸ்திரேலியாவில் உயர் கல்வி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்தன_விதானகே&oldid=2218991" இருந்து மீள்விக்கப்பட்டது