சித்ரா (மலையாளம்)
சித்ரா | |
---|---|
பிறப்பு | [1] கொச்சி, கேரளம், இந்தியா | 21 மே 1965
இறப்பு | 21 ஆகத்து 2021[2][3] சாலிகிராமம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 56)
மற்ற பெயர்கள் | சுருதி சித்ரா நல்லெண்ணெய் சித்ரா[சான்று தேவை] |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1981–2020 |
வாழ்க்கைத் துணை | விசயராகவன் (தி. 1990–2021) |
பிள்ளைகள் | 1 |
சித்ரா (Chithra; 21 மே 1965-21 ஆகத்து 2021) மலையாளத் திரைத்துறையில் தனது பங்களிப்பிற்காக நன்கு அறியப்பட்ட ஓர் இந்திய நடிகை ஆவார்.[4][5] இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1983ஆம் ஆண்டில் தனது முதல் படமான ஆட்டகலசம் படத்தில் பிரேம் நசீர் மற்றும் மோகன்லால் ஆகியோருடன் நடித்தார்.[6] இவர் நடித்த ஓர் எண்ணெய் நிறுவனத்தின் விளம்பரத்தின் மூலம் பெற்ற புகழ் காரணமாக இவருக்கு "நல்லெண்ணெய் சித்ரா" என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டது.[7]
வாழ்க்கை வரலாறு
[தொகு]1965ஆம் ஆண்டில் கொச்சி மாதவன் மற்றும் தேவிக்குப் பிறந்த மூன்று குழந்தைகளில் இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார், சித்ரா. இவருக்குத் தீபா என்ற அக்காவும், திவ்யா என்ற தங்கையும் உள்ளனர். இவர் சென்னை இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளியில் படித்தார்.[8] பத்தாம் வகுப்பு வரை படித்த இவர், திரைப்பட வாய்ப்பு அதிகமாக வந்ததால் தனது படிப்பைத் தொடர முடியவில்லை.
1990ஆம் ஆண்டு விஜயராகவனை மணந்தார். இவர்களுக்கு 1992-இல் மகாலட்சுமி என்ற மகள் பிறந்தார். திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் தனது குடும்பத்துடன் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார். இவர் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.[9] இவர் 21 ஆகத்து 2021 அன்று சென்னையில் திடீர் மாரடைப்பால் இறந்தார்.[10]
தமிழ்த் திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1975 | அபூர்வ ராகங்கள் | குழந்தை கலைஞர் | |
1978 | அவள் அப்படித்தான் | இளம் மஞ்சு | குழந்தை கலைஞர் |
1981 | ராஜ பார்வை | சுலோச்சனா | |
1982 | ஆட்டோ ராஜா | ராஜாவின் சகோதரி | |
1984 | என் உயிர் நண்பா | சாந்தி | |
1986 | குரோதம் | சுபா. | |
ரசிகன் ஒரு ரசிகை | ரம்யா | ||
1987 | சின்னபூவே மெல்லபேசு | ||
மனதில் உறுதி வேண்டும் | சித்ரா | ||
ஊர்க்காவலன் | மல்லிகா | ||
1988 | என் தங்கச்சி படிச்சவ | லட்சுமி | |
1989 | எங்க வீட்டு தெய்வம் | ஜான்சி | |
வலது கலை வைத்து வா | லச்சமி | ||
தலைப்பு செய்திகள் | |||
நினைவு சின்னம் | தங்கம் | ||
மனிதன் மாறிவிட்டன் | தமிழரசி | ||
திருப்பு முனை | சித்ரா | ||
1990 | எதிர்காற்று | கீதா | |
வெள்ளையத் தேவன் | புரணம்மா | ||
அதிசய மனிதன் | கௌசல்யா | ||
எனக்கோரு நீதி | |||
எங்கள் சாமி ஐயப்பன் | |||
60 நாள் 60 நிமிடம் | ஆஷா | ||
1991 | நாடு அதை நாடு | அஞ்சலி | |
புத்தம் புது பயணம் | செவிலியர். | ||
சேரன் பாண்டியன் | பரிமளம் | ||
புதிய நட்சத்திரம் | கதா | [11] | |
1992 | பொண்டாட்டி ராஜ்ஜியம் | பாரதியின் சகோதரி | |
சின்னவர் | பொன்னி | ||
1993 | பரம்பரியம் | விமலா | |
பத்தினிப் பெண் | |||
1994 | வீட்டைப்பாரு நாட்டைப்பாரு | திருமதி விக்ரமாதித்யன் | |
மகுடிக்காரன் | தங்கம் | ||
முதல் மணைவி | கண்ணம்மா | ||
மதுமதி | ரதி ஆசிரியர் | ||
1995 | பெரிய குடும்பம் | சாந்தி | |
1996 | கோபாலா கோபாலா | மீனாட்சி | |
ராஜாளி | லச்சமி | ||
இளமை ரோஜாக்கள் | ஆஷாவின் தாய் | ||
2001 | கபடி கபடி | நில உரிமையாளர் அம்மா | |
2005 | காதல் செய்ய விரும்பு | நிதியின் தாய் | |
2020 | மணி அடிப்பகுதி | ||
என் சங்கத்து ஆளா ஆடிச்சவன் எவாண்டா | தேவனை |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இரவு 12 மணிக்கு போன் செய்த ரசிகர் - நெகிழும் நடிகை சித்ரா!". cinema.vikatan.com/. 22 May 2021. https://cinema.vikatan.com/tamil-cinema/actress-chithra-shares-her-happiness-on-fans-birthday-wish.
- ↑ "நடிகை சித்ரா மரணம்... அதிகாலையில் திடீர் மாரடைப்பால் உயிர் பிரிந்தது!". cinema.vikatan.com. 21 August 2021. https://cinema.vikatan.com/tamil-cinema/popular-actress-chithra-died-due-to-heart-attack.
- ↑ "Nallennai Chithra death: Actress Chithra passed away due to cardiac arrest". thenewscrunch.com. 21 August 2021. https://thenewscrunch.com/nallennai-chithra-death-actress-chithra-passed-away-due-to-cardiac-arrest/38568/.
- ↑ "Popular South Indian actor 'Nallenai' Chitra passes away". The News Minute (in ஆங்கிலம்). 21 August 2021. Retrieved 22 August 2021.
- ↑ Chithra - cinediary
- ↑ "ഭരത് നടനും ഉര്വ്വശി അവാര്ഡ് നടിയും". Mangalam. Archived from the original on 13 October 2014. Retrieved 17 September 2014.
- ↑ "Malayalam actor Chitra passes away due to heart attack". Mathrubhumi. Archived from the original on 8 October 2021. Retrieved 21 August 2021.
- ↑ "ലൊക്കേഷനില് ആരോടും സംസാരം പാടില്ല; ഷൂട്ടിങ് തീര്ന്നാല് നേരെ മുറിയിലേക്ക്.. തടവറയിലടച്ച ജീവിതം, ചിത്ര തുറന്ന് പറയുന്നു". mangalam.com (in ஆங்கிலம்). Retrieved 22 August 2021.
- ↑ "ഞാന് എന്തുകൊണ്ടാണ് സിനിമ ഉപേക്ഷിച്ചത് ? വെളിപ്പെടുത്തലുമായി സൂപ്പര്സ്റ്റാറുകളുടെ നായിക". Mangalam.com. Retrieved 25 July 2018.
- ↑ "നടി ചിത്ര അന്തരിച്ചു; അന്ത്യം ഹൃദയാഘാതത്തെ തുടർന്ന്". ManoramaOnline (in மலையாளம்). Retrieved 21 August 2021.
- ↑ "Puthiya Natchathiram Songs Download isaimini, Puthiya Natchathiram Tamil Songs". 23 January 2022.