உள்ளடக்கத்துக்குச் செல்

சித்ரா விஸ்வேஸ்வரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்ரா விஸ்வேஸ்வரனின் நடனம்

சித்ரா விஸ்வேஸ்வரன் என்பவர் இந்திய பரதநாட்டியக் கலைஞர் ஆவார். சிதம்பரம் நிகழ்கலை மன்றம் என்ற பெயரில் நாட்டியப் பள்ளி ஒன்றை சென்னையில் நடத்தி வருகிறார். 1992 ஆம் ஆண்டில் இந்திய அரசின் உயரிய விருதான பத்மசிறீ விருதினைப் பெற்றார்.[1][2][3][4][5][6]

ஆரம்பகால வாழ்க்கை, பயிற்சிகள்

[தொகு]

சித்ரா விஸ்வேஸ்வரன் தன்னுடைய மூன்றாம் வயதில் இருந்தே தன்னுடைய தாய் ருக்மணி பத்மனாபனுடன் இணைந்து பரதநாட்டியம் ஆடத் தொடங்கினார். இவருடைய தந்தை இந்திய இரயில்வேயில் பனிபுரிபவர். அவருக்கு இலண்டனில் வேலை கிடைத்ததும் குடும்பத்துடன் அங்கு சென்றுவிட்டார். அங்கு பழமையான பேலட் நடனத்தைக் கற்றார். பின்பு கொல்கத்தாவில் கதக் மற்றும் மணிப்புரி போன்ற நடனங்களைக் கற்றார். இவருக்குப் பத்து அகவை இருக்கும் போது திருவிடைமருதூர் (பிறப்பிடம்) டி. ஏ. ராஜலட்சுமி என்பவரிடம் நடனம் பயில சேர்ந்தார். ராஜலட்சுமி என்பவர் ஒரு சிறந்த தேவதாசி ஆவார். அவர் கொல்கத்தாவில் தங்கியிருந்தார். அவரிடம் சேர்ந்த 10 மாதங்களிலேயே சித்ரா விஸ்வேஸ்வரனுடைய அரங்கேற்றம் நடைபெற்றது. சுமார் பத்து வருடங்களாக ராஜலட்சுமியிடம் பயிற்சி பெற்றார்.

பதின்மூன்றாம் வயதில் தியாகராஜர் வாழ்க்கையை வர்ணம் முறையில் நடன அசைவுகளை அமைத்திருந்தார். தன்னுடைய பள்ளிப் படிப்பை முடித்தவுடன் சென்னை சென்று நடனத்தில் ஈடுபட வேண்டும் என நினைத்தார் ஆனால் இவருடைய பெற்றோர் கல்லூரிப் படிப்பை முடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். எனவே கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் இளங்கலை பயின்றார். அதே சமயத்தில் கிடைக்கும் நேரங்களில் நடனம் பயின்றார்.

1970 ஆம் ஆண்டில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மேம்பட்ட பரதநாட்டியக் கலைகள் கற்றுக் கொள்வதற்கான உதவித்தொகையைப் பெற்றுக் கொண்டார். அந்த சமயத்தில் ஒரு ஆண்டில் தேசிய அளவில் இரண்டு உதவித் தொகை மட்டுமே வழங்கப்பட்டது, தற்போது இது 25 ஆக உள்ளது. பின் சென்னையில் வழுவூர் ராமைய்யா பிள்ளையிடம் நான்கு வருடம் பயின்றார். மூன்றே மாதங்களில் இவர் நடன அசைவு அமைத்த நடன நாடகத்தில் ஆடுவதற்கான நடிகராக இவரைத் தேர்வு செய்தார்.பேராசிரியர் பி.சம்பமூர்த்தி, கலை வரலாற்று ஆசிரியரான கபிலா வாட்சியன் மற்றும் நடன விமர்சகர் சுனில் கோத்தாரி ஆகியோர் இவரது நடனத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.

நடன ஆசிரியராக

[தொகு]
சித்ரா விஸ்வேஸ்வரன் கேரளாவில் நடனம் ஆடிய போது

சித்ரா விஸ்வேஸ்வரன் , பதினாறு வயது இருக்கும் போதே கொல்கத்தாவில் நடனம் கற்றுத்தர ஆரம்பித்தார். 1975 ஆம் ஆண்டில் சென்னையில் சிதம்பரம் நிகழ்கலை மன்றம் ஒன்றைத் தொடங்கினார். தற்போது இந்தப்பள்ளி உலகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது. அதனை இந்த மன்றத்தின் முன்னாள் மாணவர்கள் நடத்துகின்றனர். இதில் குறிப்பிட்ட சில மாணவர்களை மட்டுமே நடனம் பயில மாணவர்களாக சேர்க்கப்படுகின்றனர். இங்கு மாணவர்களாக சேர்க்கப்படுபவர்கள் தேசிய மற்றும் பன்னாட்டு உதவித் தொகைகள் மற்றும் ஆய்வு உதவித் தொகைகள் போன்றவற்றைப் பெறுகின்றனர்.

நடனம்

[தொகு]

விஸ்வேஸ்வரன் இந்தியாவின் பல முக்கியத் திருவிழாக்கள் மற்றும் பல வெளிநாடுகளிலும் நடனமாடியுள்ளார். குறிப்பாக ஆத்திரேலியா, ஆஸ்திரியா, பகுரைன், பெல்ஜியம், பல்காரியா, கனடா, பிஜி, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, குவைத், லக்சம்பர்க், மலேசியா, நெதர்லாந்து, ஓமான், போர்த்துகல், கத்தார், சிங்கப்பூர், இலங்கை, சுவீடன், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், இலண்டன், அமெரிக்க ஐக்கிய நாடு போன்ற பல நாடுகளில் ஆடியுள்ளார்

தூர்தர்ஷன் மற்றும் பல இந்தியத் தொலைக்காட்சிகளில் இவர் நிகழ்ச்சிகள் செய்துள்ளார். மேலும் இவருடைய நடன நிகழ்ச்சிகள் பிபிசி உள்ளிட்ட பல தொலைக்காட்சிகளிலும் பிரான்சு, மலேசியா, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து போன்ற பல நாடுகளில் ஒளிபரப்பானது. இந்தியாவின் 50 ஆவது சுதந்திர தினத்தின் போது பிபிசி நிறுவனம் இவரை சிம்பனி அறையில் நடனமாட அழைத்தது. மேலும் அதனை ஆகஸ்டு 15 , 1997 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் ஒளிபரப்பு செய்தது.

விருதுகள்

[தொகு]

1980 ஆம் ஆண்டில், இந்திய கலாச்சார நிறுவனமான கிருஷ்ண கான சபை, சித்ரா விஸ்வேஸ்வரனுக்கு அதன் நிருத்ய சூடாமணி விருதை வழங்கியது.[7] 1996 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில், இவர் சபையின் நாட்டிய கலா மாநாட்டைக் கூட்டினார். இந்திய கலை அறக்கட்டளையின் அறங்காவலராகவும், பரத நாட்டியத்தில் உதவித்தொகை மற்றும் சக ஊழியர்களுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் இந்திய அரசாங்கக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் இரவீந்திரநாத் தாகூர் நுண்கலைகளுக்கான தலைவராகவும், இந்தியாவின் சிறந்த நிகழ்த்து கலை அமைப்பான சங்கீத நாடக அகாதமியின் பொதுக்குழு மற்றும் நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கியது. 1987 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாதமி விருதையும், 1992 ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து பத்மசிறீ விருதையும் பெற்றார். கூடுதலாக, இந்தியாவின் 50வது சுதந்திர ஆண்டில், இவருக்கு மகிளா சிரோமணி (இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புகழ்பெற்ற பெண்) மற்றும் ஸ்த்ரீ ரத்னா (பெண்களில் ரத்தினம்) ஆகிய பட்டங்களும் வழங்கப்பட்டன. 2000 ஆம் ஆண்டு ஜப்பான் அறக்கட்டளை இவரை அதன் சிறப்பு விருந்தினராக அழைத்தது. 2013 ஆம் ஆண்டு, நடனத்திற்கான இசை அகாதமியின் நாட்டிய கலா ஆச்சார்யா விருதைப் பெற்றார். மேலும், ஐக்கிய நாடுகள் அவை, யுனெஸ்கோவிலும்விலும் தனது படைப்புகளை வழங்கியுள்ளார்.[8]

சொந்த வாழ்க்கை

[தொகு]

சித்ராவின் கணவர் ஆர். விஸ்வேஸ்வரன், கருநாடக இசைக்கலைஞர்ஜி. என். பாலசுப்ரமணியத்தின் மருமகன் ஆவார். அவர் சந்தூர், வீணை மற்றும் ஃபிளமெங்கோ கித்தார் போன்ற கருவிகளை வாசித்தார். மேலும் தனது மனைவியின் தயாரிப்புகளுக்கு இசையமைத்து இயக்கியுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. Retrieved 21 July 2015.
  2. "Changing narrative of dance: Group acts take centre stage". Arjun Naraynan. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 18 December 2016. Retrieved 1 October 2017.
  3. Eve's Weekly. October 1975. p. 253. Retrieved 1 October 2017.
  4. Ramani, V.V. (4 Oct 2023). "Chitra Visweswaran's 'Kolaru Padhigam' marked by fine visualisation". The Hindu. Retrieved 19 Oct 2023.
  5. Nath, Parshathy J. (19 Sep 2015). "Dance guides me and awakens me". The Hindu. Retrieved 19 Oct 2023.
  6. Chandaraju, Aruna (18 Sep 2014). "A leading light". The Hindu. Retrieved 19 Oct 2023.
  7. "Nritya Choodamani". www.krishnaganasabha.org. Archived from the original on 5 April 2016. Retrieved 24 May 2016.
  8. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; thehans என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளி இணைப்புகள்

[தொகு]

வார்ப்புரு:Padma Shri Award Recipients in Art

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்ரா_விஸ்வேஸ்வரன்&oldid=4384902" இலிருந்து மீள்விக்கப்பட்டது