உள்ளடக்கத்துக்குச் செல்

சித்ரா மண்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்ரா மண்டல்
Chitra Mandal
பிறப்பு1951 (வயது 73 - 74)
தேசியம்இந்தியர்
பணியிடங்கள்இந்திய வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்பென்சில்வேனியா பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூர்
விருதுகள்ஜெ.சி. போஸ் தேசிய ஆய்வு உதவித்தொகை

சித்ரா மண்டல் (Chitra Mandal) ஒரு வேதியியல் உயிரியலாளர். இவர் உயிரிமூலக்கூறு, சுகாதாரம் மற்றும் நோய் கட்டிப்பாட்டில் வேதி மூலக்கூறுகளின் பயன்பாடுகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். இவர் புற்றுநோய்க்கான சிகிச்சையிலும் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.[1]

தொழில்

[தொகு]

இந்தியாவின் கொல்கத்தாவிலுள்ள இந்திய வேதியியல் உயிரியல் நிறுவனத்தின் செயல் இயக்குநராகப் பணியாற்றினார். 2014 - 2015 காலகட்டத்தில் மண்டல் தனது முனைவர் படிப்பை பெங்களுரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் உயிர் கரிம வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் இவர் பிலடெல்பியாவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

இந்தியாவிற்குத் திரும்பிய பின்னர் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி மன்றம் மற்றும் இந்திய வேதியியல் உயிரியல் நிறுவனத்தில் சேர்ந்து தலைமை அறிவியலாளராகப் பணியாற்றினார். அதன் பின்னர் கொல்கத்தாவிலுள்ள புதுமை வளாகத்தின் தலைவராகவும் பின்னர் 2010 முதல் 2015 வரை அதன் இயக்குநராகப் பணியாற்றினார்.

இவரது ஆராய்ச்சியின் முக்கியத்துவம் உயிரி மூலக்கூறுகளின் கிளைகோசைலேசன் (ஒரு புரதங்கள் அல்லது கொழுமியங்களுடன் சர்க்கரைகளை இணைக்கும் வேதியியல் மாற்றம்) மற்றும் நோய் மேலாண்மை புற்றுநோய் கட்டி மற்றும் நோயெதிர்ப்புத் துறையில் அவற்றின் சாத்தியமான பயன்பாடு ஆகும்.[2] இந்த ஆய்வகம் இந்தியாவிற்குச் சொந்தமான மருத்துவ தாவரங்களைப் பயன்படுத்தி குறைந்த விலையில் நோயைக் குணப்படுத்தும தீர்வுகளையும் ஆராய்ந்து வருகிறது. எடுத்துக்காட்டாக புற்றுநோய் உயிரணுச் சிகிச்சையில் நச்சுத்தன்மையற்ற மூலிகை மூலக்கூறை அடையாளம் காண்பதாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ex-Directors of CSIR-IICB". www.iicb.res.in. Retrieved 2024-08-25.
  2. "Welcome to CSIR - Indian Institute of Chemical Biology". iicb.res.in. Archived from the original on 5 June 2017. Retrieved 2017-03-04.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்ரா_மண்டல்&oldid=4464028" இலிருந்து மீள்விக்கப்பட்டது