சித்ரா பானர்ஜி திவாகருணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்ரா பானர்ஜி திவாகருணி
பிறப்புசித்ரா பானர்ஜி
29 சூலை 1956 (1956-07-29) (அகவை 67)[1]
கொல்கத்தா, இந்தியா
தொழில்எழுத்தாளர்
தேசியம்இந்திய அமெரிக்கர்
கல்வி நிலையம்கொல்கத்தா பல்கலைக்கழகம்
ரைட் மாநில பல்கலைக்கழகம், அமெரிக்கா
கலிபோர்னியா பல்கலைக்கழகம்
வகைகவிதை, சிறுகதைகள், புதினகங்கள்; புனைகதை, சிறுவர் கதைகள், மாய யதார்த்தம், வரலாற்று புனைவு
குறிப்பிடத்தக்க படைப்புகள்மிஸ்டிரெஸ் ஆப் ஸ்பைசஸ்
துணைவர்மூர்த்தி
பிள்ளைகள்அபய், ஆனந்த்
இணையதளம்
www.chitradivakaruni.com

சித்ரா பானர்ஜி திவாகருணி (Chitra Banerjee Divakaruni) (பிறப்பு சித்ரலேகா பானர்ஜி, சூலை 29, 1956 ) ஓர் இந்திய-அமெரிக்க எழுத்தாளரும், கவிஞரும், ஹியூஸ்டன் பல்கலைக்கழக படைப்பு எழுத்துத் திட்டத்தில் பெட்டி மற்றும் யீன் மெக்டேவிட் பேராசிரியரும் ஆவார்.

1996இல் வெளியான இவரது சிறுகதை தொகுப்பான, அரேஞ்சிடு மேரேஜ், (மிஸ்டிரெஸ் ஆப் ஸ்பைசஸ், சிஸ்டர்ஸ் ஆப் மை ஹார்ட் ) ஆகிய இரண்டு புதினத்திற்கும் அமெரிக்கப் புத்தக விருதை வென்றார்.[2] அதே போல் இவரது ஒரு சிறுகதையான் தி வேர்டு லவ் திரைப்படமாக எடுக்கப்பட்டன. மிஸ்டிரெஸ் ஆப் ஸ்பைசஸ் புத்தகங்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு பரிசுக்கு சிலகாலம் பட்டியலிடப்பட்டது. தற்போது, சிஸ்டர்ஸ் ஆப் மை ஹார்ட், ஒலியண்டர் கேர்ள், பேலஸ் ஆஃப் இல்யூசன்ஸ், ஒன் அமேசிங் திங் ஆகிய அனைத்து புதினங்களும் திரைப்படங்களாகவோ அல்லது தொலைக்காட்சித் தொடர்களாக உருவாக்கப்பட்டுள்ளது.

திவாகருணியின் படைப்புகள் பெரும்பாலும் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பெரும்பாலும் தெற்காசிய குடியேறியவர்களின் அனுபவங்களில் கவனம் செலுத்துகின்றன. இவர் குழந்தைகளுக்காகவும், பெரியவர்களுக்காக எழுதுகிறார். மேலும் யதார்த்தமான புனைகதை, வரலாற்று புனைகதை, மாய யதார்த்தம், கட்டுக்கதை, கற்பனை உட்பட பல வகைகளில் புதினங்களை வெளியிட்டுள்ளார்.

வாழ்க்கை[தொகு]

திவாகருணி இந்தியாவின் கொல்கத்தாவில் பிறந்தார். 1976இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.[3] அதே ஆண்டில், இவர் ரைட் மாநில பல்கலைக்கழகத்தில் சேர அமெரிக்கா சென்றார். அங்கு இவர் முதுகலைப் பட்டம் பெற்றார்.[4] 1985இல் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றார். (கிறித்தோபர் மார்லொவ் இவரது முனைவர் பட்ட ஆய்வுக்கு உட்பட்டவர்).

திவாகருணி தனது கணவர் மூர்த்தியுடன் டெக்சஸில் வசிக்கிறார். இவருக்கு ஆனந்த், அபய் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் (தனது குழந்தைகளின் பெயர்களை தனது புதினங்களில் பயன்படுத்தியுள்ளார்).[5]

தொழில்[தொகு]

திவாகருணி பட்டதாரிப் பள்ளி மூலம், குழந்தை காப்பகம், கடையில் எழுத்தர், பேக்கரியில் ரொட்டியை துண்டாக்குவது ரைட் மாநில பல்கலைக்கழகத்தில் ஆய்வக உதவியாளர், பெர்க்லியில் உள்ள சர்வதேச இல்லத்தில் ஒரு சமையலறையில் உதவியாளர் போன்ற சிறுசிறு வேலைகளை செய்துள்ளார். இவர் பெர்க்லியில் பட்டதாரி ஆசிரியர் உதவியாளராக இருந்தார். லாஸ் ஆல்டோஸ், கலிபோர்னியாவில் உள்ள புத்ஹில் கல்லூரியிலும்,டையப்லோ பள்ளத்தாக்கு கல்லூரியிலும் கற்பித்தார். இவர் தேசிய அளவில் தரவரிசையில் உள்ள ஹூஸ்டன் கிரியேட்டிவ் ரைட்டிங் திட்டத்தில் கிரியேட்டிவ் ரைட்டிங் மெக்டேவிட் பேராசிரியராக உள்ளார்.[6]

திவாகருணி, மைத்ரி என்ற நிறுவனத்தின் இணை நிறுவனரும் முன்னாள் தலைவரும் ஆவார். இது 1991ஆம் ஆண்டில் தெற்காசியப் பெண்களுக்கான குடும்ப வன்முறைகளைக் கையாள்வதற்காக உருவாக்கப்பட்ட உதவி மையாமாகும்.[7] திவாகருணி அதன் ஆலோசனைக் குழுவிலும், ஹூயூஸ்டன், தயாவில் இதே போன்ற அமைப்பின் ஆலோசனைக் குழுவிலும் பணியாற்றுகிறார். இவர் பல ஆண்டுகளாக பின்தங்கிய இந்திய குழந்தைகளுக்கு எழுத்தறிவைக் கொண்டுவருவதற்காக செயல்படும் இலாப நோக்கற்ற நிறுவனமான பிராதம் ஹூஸ்டனின் குழுவில் பணியாற்றியுள்ளார். தற்போது இதிலிருந்து ஓய்வு பெற்றவர்களின் குழுவிலும் உள்ளார். [8]

திவாகருணியின் ஒன் அமேசிங் திங் புதினத்தை ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான கில்லன் குரூப் தேர்வு திரைப்படமாக்குவதற்காக தேர்வு செய்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. http://www.encyclopedia.com/article-1G2-3416300043/divakaruni-chitra-banerjee-1956.html
  2. "Previous Winners of the American Book Award" (PDF). beforecolumbusfoundation.com. பார்க்கப்பட்ட நாள் 2020-02-07.
  3. "Chitra Banerjee Divakaruni Biography". biography.jrank.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-25.
  4. "Chitra Banerjee Divakaruni". www.goodreads.com. பார்க்கப்பட்ட நாள் 2019-05-25.
  5. See author's Bio on her webpage
  6. "Department of English Creative Writing Program Professor Honored Among Houston's Finest Authors". University of Houston – College of Liberal Arts and Social Sciences – uh.edu. 2019-10-01. பார்க்கப்பட்ட நாள் 2020-02-07.
  7. Seshachari, Neila C. (Winter 2001). "Writing As Spiritual Experience: A Conversation with Chitra Banerjee Divakaruni". Weber Journal Archive. பார்க்கப்பட்ட நாள் 2019-06-08.
  8. Agarwal, Dr. Gunjan and Gunjan Kapil (December 2014). "The Representation of Woman in Chitra Banerjee Divakaruni's Doors, Affair, and Meeting Mrinal". The Criterion 5 (6): 77. http://www.the-criterion.com/V5/n6/GunjanKapil.pdf. 

வெளி இணைப்புகள்[தொகு]