சித்ரா சோமன்
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இந்தியா |
பிறப்பு | 10 சூலை 1983 |
விளையாட்டு | |
விளையாட்டு | தடகளம் |
நிகழ்வு(கள்) | விரைவோட்டம் |
சாதனைகளும் விருதுகளும் | |
தனிப்பட்ட சாதனை(கள்) | 200 மீ: 24.74 (தோகா 2006) 400 மீ: 51.3 (சென்னை 2004) 400 மீ தடையோட்டம்: 57.70 (லூதியானா 2005) |
சித்ரா குளத்தும்முரியில் சோமன் (Chitra Kulathummuriyil Soman) (பிறப்பு 10 சூலை 1983) இந்தியாவைச் சேர்ந்த விரைவோட்ட விளையாட்டு வீரர் ஆவார். இவர் கேரள மாநிலம் கோட்டயத்தில் பிறந்தார். இவர் 400 மீட்டர் ஓட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவராவார். ஒரு இந்திய வேகப்பந்து வீச்சாளர். சதி கீதா, க. மா. பீனாமோல், ராஜ்விந்தர் கௌர் ஆகியோருடன் சேர்ந்து 2004 கோடைகால ஒலிம்பிக்கில் 4 x 400 மீட்டர் ஓட்டத்தில் ஏழாம் இடத்தை அடைந்தார். இந்த அணி, கீதாவுக்கு பதிலாக மன்ஜீத் கௌர் ஓடியதால் 4 x 400 மீட்ட ஓட்டத்தில் 3: 26.89 நிமிட நேரத்தில் கடந்து தேசிய சாதனை படைத்தது.[1] 2006 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்காகவும் இவர் ஓடினார். 2007ஆம் ஆண்டில், 23 சூன் 2007 அன்று குவகாத்தியில் நடைபெற்ற ஆசியப் போட்டித் தொடரிலும், 27 சூன் 2007 அன்று நடைபெற்ற ஓட்டத்திலும் 400 மீ ஓட்டப்பந்தயத்தில் சித்ரா சோமன் தங்கப் பதக்கம் வென்றார். சூலை 2007இல் அம்மானில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் இந்திய பெண்கள் 4 × 400 மீ ஓட்ட அணியை தங்கத்திற்கு வழிநடத்தினார். 2008ஆம் ஆண்டில், பிப்ரவரி 2008 இல் தோகாவில் நடைபெற்ற தடகளத்தில் 3வது ஆசிய உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகளில் இந்திய பெண்கள் 4 × 400 மீ ஓட்ட அணிக்கு மற்றொரு வெற்றியை பெற்று சித்ரா மீண்டும் தனது திறமையை வெளிபடுத்தினார்.[2] [3]
400 மீட்டரில் இவரது தனிப்பட்ட சிறந்த நேரம் 51.30 வினாடிகள், சூன் 2004 இல் சென்னையில் அடையப்பட்டது. இவர் பஞ்சாபைச் சேர்ந்தவரை 2011 இல் திருமணம் செய்து கொண்டார்.
சான்றுகள்
[தொகு]- ↑ http://www.gbrathletics.com/cw99.htm
- ↑ "MEDAL WINNERS OF ASIAN GAMES". Athletics Federation of India. பார்க்கப்பட்ட நாள் 13 July 2021.
- ↑ "இந்திய விளையாட்டு வீராங்கனைகள் இதுவரை வென்றுள்ள பதக்கங்கள் எத்தனை?". BBC Tamil. 25 February 2020. பார்க்கப்பட்ட நாள் 13 July 2021.
- சித்ரா சோமன் profile at IAAF