சித்ரபு நாராயண ராவ்
சித்ரபு நாராயண மூர்த்தி | |
---|---|
பிறப்பு | 1913 பந்தர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | 1985 (அகவை 71–72) |
பணி | இயக்குநர் தயாரிப்பாளர் |
வாழ்க்கைத் துணை | சித்ரபு அனசூயா தேவி |
பிள்ளைகள் | சித்ரபு லட்சுமண பிரசாத், சித்ரபு அசோக் குமார், சித்ரபு சிவ பிரகாஷ், சித்ரபு விஜயலட்சுமி |
சித்ரபு நாராயண ராவ் (Chitrapu Narayana Rao, பிறப்பு சித்ரபு நாராயண மூர்த்தி ; 1913-1985) என்பவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றியதற்காக பெயர் பெற்ற ஒரு இந்திய திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார். எதிர்பாராதது (1958), அன்னையின் ஆணை (1962) ஆகிய படங்களுக்காக சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றார். 1967 ஆம் ஆண்டு தெலுங்கு படமான பக்த பிரகலாதாவுக்காக நந்தி விருதையும் பெற்றார். [1]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இவர் 1913 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தின் (தற்போதைய ஆந்திரப் பிரதேசம் ) மச்சிலிப்பட்டினத்தில் பிறந்தார். திரைப்பட இயக்குநர் சித்ரபு நரசிம்ம ராவ், இவரது சகோதரர். இவர் 1962 இல் தன் மகனை இழந்தார். இவர் 1985 ஆம் ஆண்டு இறந்தார்.
தொழில்
[தொகு]சீதா கல்யாணம், சதி துளசி, மோகினி ருக்மாங்கதா, கிருஷ்ண ஜராசந்தா போன்ற படங்களில் தன் தம்பி சித்ரபு நரசிம்ம ராவுக்கு உதவியாக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். வேமுரி கக்கையா மற்றும் சிறீரஞ்சனி நடித்த பக்த மார்கண்டேயா திரைப்படம் இவர் இயக்குநராக அறிமுகமான படமாகும்.[2] அந்தப் படம் இவரை ஒரு இயக்குநராக சிறப்பாக நிலைநிறுத்தியது. தொடர்ந்து மைராவணா, பக்த பிரகலாதா, தக்ஷ யக்ஞம், பீஷ்மா போன்ற பல படங்களை தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் இயக்கினார். அதே காலகட்டத்தில், தனது நிதிநிலையைப் பெருக்குவதற்காக ஏ.வி.எம். புரொடக்சன்சுக்கு ஒரு திரைப்படத்தை இயக்க விரும்பினார். அவர்கள் 1965 ஆம் ஆண்டு முதல் முறையாக ஈஸ்ட்மேன் நிறத்தில் தயாரித்த பக்த பிரகலாதாவில் பணிபுரியத் தொடங்கினர். இது 25 ஆண்டுகளுக்கு முன்பு இவர் கருப்பு வெள்ளைப் படமாக உருவாக்கிய படத்தை விட தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சிறப்பாக இருந்தது. இந்தப் படத்திற்கு டி.வி. நரச ராஜு இணை எழுத்தாளராக இருந்தார். இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.
விருதுகள்
[தொகு]- நந்தி விருது இரண்டாவது சிறந்த திரைப்படம் (இயக்குநர்) - பக்த பிரகலாதா
திரைப்படவியல்
[தொகு]- பக்த மார்க்கண்டேயா (1938)
- மஹிரவணா (1940)
- தட்சயக்ஞம் (1941)
- பக்த பிரகலாதா (1942)
- பக்த கபீர் (1944)
- பீஷ்மா (1944)
- சம்சார நாரதி (1944)
- பிரம்ம ரதம் (1947)
- மதலசா (1948)
- பிரம்ம ரதம் (1949)
- என் தங்கை (1952)
- நா செல்லேலு (1953)
- எதிர்பாராதது (தமிழ், 1954)
- ஆதர்ஷசதி (1956)
- நாக பஞ்சமி (1956/II)
- நகுல சாவிதி (1956)
- பத்தினி தெய்வம் (தமிழ், 1957)
- அன்னையின் ஆணை (தமிழ், 1958)
- மணமாலை (தமிழ், 1958)
- நான் வளர்த்த தங்கை (தமிழ், 1958)
- தெய்வமே துணை (தமிழ், 1959)
- பக்த சபரி (தெலுங்கு, 1960)
- பக்த சபரி (தமிழ், 1960)
- பக்த சபரி (கன்னடம், 1960)
- கிருஷ்ணா குசேலா (1961) (இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்)
- டாலிச்சினா அஜ்னா (1961)
- சித்தூர் ராணி பத்மினி (தமிழ், 1963)
- பதிவ்ரதா (1964)
- பக்த பிரகலாதா (தெலுங்கு, 1967)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chitrapu Narayana Rao Filmography பரணிடப்பட்டது 23 செப்டெம்பர் 2015 at the வந்தவழி இயந்திரம்
- ↑ CineGoer.com - Nostalgia - Bhakta Prahlada பரணிடப்பட்டது 15 மார்ச் 2008 at the வந்தவழி இயந்திரம்