சித்ரன் ரகுநாத்
![]() | இந்தக் கட்டுரையின் தலைப்பு கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். (மே 2019 நாளில் இருந்து மூன்று மாதங்களுக்குள், எவரும் இதன் குறிப்பிடத்தகுநிலையினை நிறுவாத நிலையில், இக்கட்டுரைப் பக்கம் அழிக்கப்படும்) |
சித்ரன் ரகுநாத் (பிறப்பு: 1971) தமிழ் எழுத்துலகில் ஒரு அறியப்பட்ட எழுத்தாளர். 1995-ல் இருந்து தமிழின் பிரபல வாரப்பத்திரிகைகளிலும், இணைய இதழ்களிலும் கதைகள் எழுதிவருகிறார். திரைப்படத்தில் [1]பாடல்களும் எழுதியுள்ளார். இவர் ஒரு கவிஞரும், ஓவியரும் ஆவார்.
எழுத்துப் பணிகள்[தொகு]
கல்கி, ஆனந்த விகடன், அமுதசுரபி, குமுதம், குங்குமம், மங்கையர் மலர், ஃபெமினா தமிழ் போன்ற தமிழ் வார, மாத இதழ்களில் இவர் சிறுகதைகள் வெளியாகியுள்ளன.
புத்தகங்கள்[தொகு]
மனதில் உனது ஆதிக்கம் (சிறுகதைகள்) - கிழக்கு பதிப்பகம் வெளியீடு (2004)
தொடர்பு எல்லைக்கு வெளியே (சிறுகதைகள்) - மின்னூல்
சித்ரன் ரகுநாத் சிறுகதைகள் (சிறுகதைகள்) - மின்னூல்
தருணம் (குறுநாவல்) - மின்னூல்
சில்லவுட் புத்தர் (கவிதைகள்) - மின்னூல்
ஜவ்வரிசி வடாம், உள் பனியன் மற்றும் ஒரு ரேடியோ விளம்பரம் (வலைப்பதிவுகள் தொகுப்பு) - மின்னூல்
கோடிட்ட இடங்கள் (நாவல்) - மின்னூல்
சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் (பயணக்குறிப்புகள்) முன்னேர் பதிப்பகம் வெளியீடு - மின்னூல்
மொழிபெயர்ப்புச் சிறுகதை[தொகு]
சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களின் தொகுப்பில் 2019-ல் வெளியான UNWINDING AND OTHER CONTEMPORARY TAMIL SHORT STORIES என்னும் ஆங்கில சிறுகதைத் தொகுப்பில் இவரது சிறுகதையொன்று மொழிபெயர்க்கப்பட்டு இடம்பெற்றுள்ளது.
வெளி இணைப்புகள்[தொகு]
தஞ்சை மாவட்ட மத்திய நூலகத்தில் சித்ரன் ரகுநாத் புத்தகம்
மீன் (சிறுகதை - தினமணி கதிர் வார இதழ்)
ஒரே ஒரு பாடல் (சிறுகதை - குங்குமம் வார இதழ்)
பிரதிலிபியில் எழுத்தாளர் சித்ரன் ரகுநாத் பக்கம்
- ↑ "Krishnaveni Panjaalai", Wikipedia (in ஆங்கிலம்), 2018-12-10, 2019-05-14 அன்று பார்க்கப்பட்டது