உள்ளடக்கத்துக்குச் செல்

சித்னல் சண்முகப்பா பாசப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்னல் சண்முகப்பா பாசப்பா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 ஏப்ரல் 1936
சம்பகாவன், பெல்காம் (கருநாடகம்)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சுசீலா (8 மே 1966)
கல்விபி.ஏ., எல்.எல்.பி.,
தொழில்வழக்கறிஞர் & உழவர்.

சித்னல் சண்முகப்பா பாசப்பா (Sidnal Shanmukhappa Basappa) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்த இவர் கர்நாடகாவின் பெலகாவி தொகுயிலிருந்து தொடர்ந்து நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.

பின்னணி

[தொகு]

சண்முகப்பா கர்நாடகாவின் பெல்காவி மாவட்டத்தில் உள்ள சம்பகாவனில் பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான பாசப்பா சித்னல் இவரது தந்தையாவார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

சண்முகப்பா 1966 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதியன்று சுசிலா என்ற பெண்னை திருமணம் செய்து கொண்டார். [3] இத்தம்பதியருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் என மூன்று குழந்தைகள் இருந்தனர்.

2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய் பரவலின் போது கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு இவர் இறந்தார்.

பதவிகள்

[தொகு]
# தொடக்கம் முடிவு பதவி
1 1958 1962 தலைவர் - இளைஞர் காங்கிரசு, பெல்காம் மாவட்டம்
2 1969 1973 பொதுச் செயலாளர் - மாவட்ட கூட்டுறவு வங்கி, கர்நாடகா
3 1973 1976 கர்நாடக மின்சார வாரிய உறுப்பினர்
4 1980 1984 ஏழாவது மக்களவை உறுப்பினர், பெளகாவி மக்களவைத் தொகுதி.
5 1984 1989 பெளகாவி மக்களவைத் தொகுதி, எட்டாவது மக்களவை உறுப்பினர்.
6 1989 1991 பெளகாவி மக்களவைத் தொகுதி, ஒன்பதாவது மக்களவை உறுப்பினர்
6 பிப்ரவரி 1990
  • இரயில்வே மாநாட்டு குழு உறுப்பினர்.
1990
  • தொழில்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்
7 1991 1996 பெளகாவி மக்களவைத் தொகுதி, பத்தாவது மக்களவை உறுப்பினர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ಮಾಜಿ ಸಂಸದ, ಕಾಂಗ್ರೆಸ್ ಹಿರಿಯ ನಾಯಕ ಎಸ್.ಬಿ. ಸಿದ್ನಾಳ್ ಇನ್ನಿಲ್ಲ! (in கன்னட மொழி)
  2. "Former Belagavi MP S.B. Sidnal passes away" (in en-IN). The Hindu. 2021-04-27. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/karnataka/former-belagavi-mp-sb-sidnal-passes-away/article34422606.ece. 
  3. "Lok Sabha Members Bioprofile-". பார்க்கப்பட்ட நாள் 13 December 2017."Lok Sabha Members Bioprofile-". Retrieved 13 December 2017.