உள்ளடக்கத்துக்குச் செல்

சித்தேம் பர்னிகா ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தேம் பர்னிகா ரெட்டி
தெலங்காணா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2023 திசம்பர் 3
தொகுதிநாராயண்பேட்டை
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்விசுவஜித் ரெட்டி சிந்தாலபானி[1]

சித்தேம் பர்னிகா ரெட்டி (Chittem Parnika Reddy)(பிறப்பு 1993) தெலங்காணா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.[2] இவர் 2023 தெலங்காணா சட்டமன்ற தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு பிரதிநிதித்துவப்படுத்தி நாராயண்பேட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] பாரதா இராட்டிர சமிதி கட்சியின் எஸ். ராஜேந்தர் ரெட்டியை 7951 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

நாராயண்பேட்டை மாவட்டத்தில் உள்ள தன்வாடா மண்டலத்தைச் சேர்ந்தவர் பரினிகா. மக்தல் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவரது தாத்தா சித்தேம் நர்சி ரெட்டி, 2005 சுதந்திர தினத்தன்று நக்சலைட்டுகளின் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதே தாக்குதலில் இவரது தந்தை வெங்கடேசுவர் ரெட்டியும் கொல்லப்பட்டார். இவர் பாஜகவின் டி. கே. அருணாவின் மருமகள் ஆவார். இவரது மாமா சி. ராம் மோகன் ரெட்டி மக்தல் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய இராட்டிர சமிதி கட்சியின் சார்பில் போட்டியிட்டு காங்கிரசு வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.[4] இவர் தனது மருத்துவப் படிப்பினை முடித்து தற்போது மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார்.[6]

தொழில்

[தொகு]

சித்தேம் பர்னிகா ரெட்டி நாராயண்பேட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதல் முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக 2023ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மூலம் ஆனார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "CHITTEM PARNIKA REDDY Affidavit". 2023 இம் மூலத்தில் இருந்து 16 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231216192553/https://m.sakshi.com/ts-elections-2023/assets/affidivits/Chittem-Parnika-Reddy.pdf. பார்த்த நாள்: 16 December 2023. 
  2. "రాజకీయాల్లోకి మరో వారసురాలు.. ఎవరీ చిట్టెం పర్ణిక రెడ్డి?". News18 తెలుగు (in தெலுங்கு). 2023-06-05. Retrieved 2024-01-04.
  3. "Narayanpet Assembly Election Results 2023 Highlights: INC's Chittem Parnika Reddy defeats BRS's S.rajender Reddy with 7951 votes". India Today (in ஆங்கிலம்). 2023-12-03. Retrieved 2024-11-07.
  4. 4.0 4.1 "Bloodline and ballot: When family ties cut through party lines in Telangana". 28 November 2023. https://www.thehindu.com/elections/telangana-assembly/bloodline-and-ballot-when-family-ties-cut-through-party-lines/article67584033.ece. 
  5. "Chittem Parnika Reddy Election Results 2023: News, Votes, Results of Telangana Assembly". NDTV.com (in ஆங்கிலம்). Retrieved 2024-01-04.
  6. MLA Parnika Reddy About Family : నా కొడుకు నాకు గన్ మెన్ వద్దు మమ్మీ అంటాడు | BIGTV (in ஆங்கிலம்), 8 March 2024, retrieved 2024-03-25
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தேம்_பர்னிகா_ரெட்டி&oldid=4384883" இலிருந்து மீள்விக்கப்பட்டது