சித்தூர் முஹம்மது ஹபீபுல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சித்தூர் முஹம்மது ஹபீபுல்லா (Chittoor Mohammed Habeebullah) ஒரு இந்திய இரைப்பைக் குடல் மருத்துவர் ஆவார், இந்தியாவில் இரைப்பைக் குடலியல் மருத்துவத் துறையில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக பெயர் பெற்றவர். தென்னிந்திய மாநிலமான ஆந்திராவில் 1937 இல் சித்தூரில் பிறந்தார்.[1][2] Born in 1937[3]

கல்வி[தொகு]

ஹபீபுல்லா 1958 இல் குண்டூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவத்தில் (எம்.பி.பி.எஸ்) பட்டம் பெற்றார், அதன் பிறகு ஆந்திர பல்கலைக்கழகத்தில் பொது மருத்துவத்தில் முதுகலை பட்டமும் (எம்.டி) மற்றும் டி.எம். முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சண்டிகரிலும் பயின்றார்.

மருத்துவப்பணி[தொகு]

  • ஹபீபுல்லா உஸ்மானியா மருத்துவக் கல்லூரியின் காஸ்ட்ரோஎன்டாலஜி துறையில் உதவி பேராசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்,
  • 1975 முதல் 1992 வரை துறை பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.
  • 1994 வரை மருத்துகல்லூரியின் அதிபராகவும் பணியாற்றினார்.
  • ஹைதராபாத்தின் டெக்கான் மருத்துவ அறிவியல் கல்லூரியில், கல்லீரல் ஆராய்ச்சி மற்றும் நோயறிதலுக்கான மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார். தொடர்ந்து ஆந்திர அரசின் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார்.
  • ஹபீபுல்லா இந்தியாவின் தேசிய அறிவியல் அகாடமியின் 1997 ஃபெலோவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • பல அறிவியல் வெளியீடுகளை வெளியிட்டுள்ளார்.
  • 1997 ஆம் ஆண்டில் குவாரிஸ்மி சர்வதேச விருதைப் பெற்றவர். [4],[5]
  • ஹபீபுல்லாவிற்கு 2001 ஆம் ஆண்டில் இந்திய அரசின் நான்காவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இறப்பு[தொகு]

10 ஜூலை 2010 அன்று இறந்தார்

மேற்கோள்கள்[தொகு]

  1. Springer (October 2010). "Chittoor Mohammed Habibullah". Indian Journal of Gastroenterology 29 (5): 175–176. doi:10.1007/s12664-010-0053-9. 
  2. "Learning from Expert". Learning from Expert. 2014. Archived from the original on 2 January 2015. பார்க்கப்பட்ட நாள் 2 January 2015.
  3. "NASI". NASI. 2014. பார்க்கப்பட்ட நாள் 2 January 2015.
  4. "Listing on Pubfacts". Pubfacts. 2014. Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 2 January 2015.
  5. "KIA". KIA. 2014. Archived from the original on 15 December 2013. பார்க்கப்பட்ட நாள் 2 January 2015.