சித்தி நரசிம்ம மல்லர்
| சித்தி நரசிம்ம மல்லர் | |
|---|---|
| இலலித்பூரின் மன்னர் | |
| ஆட்சிக்காலம் | 1619–1661 |
| முன்னையவர் | சிவசிம்ம மல்லர் |
| பின்னையவர் | சிறீநிவாச மல்லர் |
| பிறப்பு | நேபாளம் |
| இறப்பு | 1661 வாரணாசி |
| துணைவர் | பானுமதி |
| குழந்தைகளின் பெயர்கள் | சிறீநிவாச மல்லர் |
| அரசமரபு | மல்லர் வம்சம் |
| தந்தை | அரிகர சிம்மன் |
சித்திநரசிம்மன் (Siddhi Narasimha Malla) ஒரு மல்லர் வம்ச மன்னரும் இலலித்பூரின் மன்னரும் ஆவார். இவர் ஒரு மதம் சார்ந்த மன்னராக இருந்தார். 1619 முதல் 1661 வரை ஆட்சி செய்தார். இவர் சித்தி நரசிங், சித்தி நர் சிங், சித்தி நரசிங்க மல்லன் ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.[1]
பின்னணி
[தொகு]காத்மாண்டு பள்ளத்தாக்கு காந்திபூர், இலலித்பூர், பக்தபூர் ஆகிய மூன்று இராச்சியங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, இலலித்பூரின் நிலப்பிரபுக்களால் ஆளப்பட்டது. 1697-ஆம் ஆண்டில், சித்தி நரசிம்மர் மற்றும் இலட்சுமி நரசிம்ம மல்லனின் தாத்தா சிவசிம்ம மல்லன், இலலித்பூரின் பகுதியை இணைத்துக் கொண்டார். பின்னர் அது விஷ்ணுசிம்மரின் மகன் புரந்தரசிம்மனால் ஆளப்பட்டது.[2]
சிவசிம்ம மல்லர் தனது மகன் அரிகரசிம்மரை இலலித்பூரின் ஆளுநராக நியமித்தார். சிறிது காலத்திற்குப் பிறகு அரிகரசிம்மர் இறந்தார். அவருக்குப் பிறகு அவரது மூத்த மகன் சித்திநரசிம்மர் ஆட்சிக்கு வந்தார். 1619-இல் சிவசிம்ம மல்லர் இறந்தபோது சித்திநரசிம்மர் காந்திபூரிலிருந்து இலலித்பூர் சுதந்திரமாக இருப்பதாக அறிவித்தார்.[3]
ஆட்சி
[தொகு]சித்திநரசிம்ம மல்லன் பொதுவாக இலலித்பூரின் மன்னர்களில் மிகச்சிறந்த ஒருவராகக் கருதப்படுகிறார். அப்போது இராம் ஷாவால் ஆளப்பட்ட கோர்கா நாடு போன்ற பல அண்டை நாடுகளுடன் இலலித்பூர் நல்ல நட்புடன் இருந்தது. இரு நாடுகளிலும் ஆண் வாரிசு இல்லாமல் யாராவது இறந்தால் ஒரு கூட்டு வாரிசு வேண்டும் என்ற ஒப்பந்தம் இருந்தது. இவரது மனைவி பானுமதி தெராய் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் தெராய் நாடுகளுடன் நட்பான உறவுகளைப் பேணி வந்தார். இலலித்பூரைச் சேர்ந்த வணிகர்கள் லாசாவுடன் வர்த்தகம் செய்யக்கூடிய வகையில் காந்திபூருடன் அவர் ஒரு ஒப்பந்தத்தை பராமரித்து வந்தார். மேலும் கோர்காவுடனும் இதேபோன்ற ஏற்பாட்டைக் கொண்டிருந்தார்.[4]
பிரதாப் மல்லர் அதன் மன்னராக ஆன பிறகு காந்திபூருடனான உறவுகள் மோசமடையத் தொடங்கின. பிரதாப் மல்லர், தனது தந்தையைப் போலல்லாமல், இலலித்பூர் காந்திபூரிலிருந்து சுதந்திரமாக இருப்பதற்கான யோசனையை விரும்பவில்லை. மேலும் இலலித்பூருக்கு எதிராக பல தாக்குதல்களை நடத்தினார்.[3]
சித்தி நரசிம்ம மல்லர் தனது மகன் சிறீனிவாச மல்லனுக்கு சிறு வயதிலிருந்தே ஒரு நாட்டை ஆட்சி செய்வது பற்றி கற்பித்தார். ஒரு மன்னராக இருந்து படிப்படியாக ஓய்வு பெற்று மத நடவடிக்கைகளில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள சித்திநரசிம்மருக்கு இருந்த விருப்பமே இதற்கு ஓரளவு காரணமாக இருக்கலாம். 1641-ஆம் ஆண்டில் சிறீனிவாசர் தனது தந்தையுடன் இணைந்து நிர்வாகப் பொறுப்புகளைக் கையாண்டார்.
மதச் செயல்பாடுகள்
[தொகு]சித்திநரசிம்மர் மிகவும் மதச்சார்பான மன்னராக இருந்தார். ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்ந்தார். இவர் ஒரு இந்துவாக இருந்தார். ஆனால், அனைத்து மதங்களின்பாலும் தாராளவாத கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தார். 1636-இல் கிருஷ்ணர் கோயில் போன்ற பல கோயில்களையும் கட்டினார். கோட்டி ஹோம் எனப்படும் தியாக விழாக்களை நிகழ்த்தினார். மேலும், மைதிலி மொழியில் பக்திப் பாடல்களை எழுதினார். ஆரம்பகால மல்ல மன்னர்களால் கட்டப்பட்ட பல கோயில்களையும் இவர் புதுப்பித்தார்.[5]
லாசாவிலிருந்து திரும்பும் மக்கள் ஒரு சுத்திகரிப்பு செயல்முறைக்கு உட்படுவதை வழக்கமாக்கினார்.[6] 1652-ஆம் ஆண்டில், இவர் இந்தியாவில் இரண்டு ஆண்டுகால யாத்திரை ஒன்றினை மேற்கொண்டார்.[2]
இறப்பு
[தொகு]1657-இல் இவர் மன்னர் பதவியைத் துறந்து நாட்டிலிருந்து வெளியேறி, கங்கை ஆற்றங்கரையில் வசித்து வந்தார். இவரது கடைசி ஆண்டுகளில் வாரணாசிக்குச் சென்றார். அங்கு 1661 இல் இறந்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Collections Online | British Museum". www.britishmuseum.org. Retrieved 2023-02-14.
- ↑ 2.0 2.1 2.2 Shaha, Rishikesh. Ancient and Medieval Nepal (PDF) (in ஆங்கிலம்). Kathmandu, Nepal: University of Cambridge. pp. 71–74.
- ↑ 3.0 3.1 Regmi, Mahesh C.. "Regmi Research Series". German Oriental Society 5: 197–199. https://studylib.net/doc/8525992/regmi_05.
- ↑ Shrestha, D.B.; Singh, C.B. (1972). The History of Ancient and Medieval Nepal (PDF) (in English) (1st ed.). Kathmandu: University of Cambridge. pp. 55–57.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) - ↑ Wright, Daniel (1877). History of Nepal (PDF). கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம். pp. 233–243.
- ↑ Wright, Daniel (1877). History of Nepal (PDF). கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம். pp. 233–243.