சித்திரை வெண்குடை திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சித்திரை வெண்குடை திருவிழா என்பது தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினரால், விருதுநகர் மாவட்டத்திலுள்ள, இராஜபாளையத்தில் நடத்தப்படுகின்ற ஓர் திருவிழாவாகும். இராஜபாளையத்தில் உள்ள சீனிவாசன் புதுத்தெரு, செல்லம் வடக்கு, தெற்கு தெருக்கள், மடத்துப்பட்டி தெரு, காமாட்சி கோயில் தெரு, முடங்கியார் தெரு போன்ற தெருக்களில் வசிப்பவர்கள் இத்திருவிழாவினை நடத்துகிறார்கள்.[1] இந்த திருவிழாவில் வெண்குடை ஏந்தியவாறு ஏழு தெருக்களில் வலம் வருகிறார்கள்.

இத்திருவிழாவில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டுமெனவும், குறிப்பாக ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டுமெனவும், இத்திருவிழாவினை வரையறைச் செய்துள்ளார்கள்.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

வெண்குடை சித்திரை திருவிழா ஊர்வலம் - தினமணி