உள்ளடக்கத்துக்குச் செல்

சித்திகா கபீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்திகா கபீர்
Siddiqua Kabir
தாய்மொழியில் பெயர்সিদ্দিকা কবীর
பிறப்பு(1931-05-07)மே 7, 1931
டாக்கா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்புசனவரி 31, 2012(2012-01-31) (அகவை 80)
டாக்கா, வங்காள தேசம்
கல்விமுதுநிலை உணவு மற்றும் ஊட்டச்சத்து
படித்த கல்வி நிறுவனங்கள்ஓக்லகோமா மாநிலப் பல்கலைக்கழகம்
பணிஊட்டச்சத்து நிபுணர், கல்விக்கூடம், சாமையல் புத்தகம், புத்தக ஆசிரியர், சமையல் நிகழ்ச்சி, தொலைக்காட்சி தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1965-2012
விருதுகள்செல்டெக்கு விருது, அனன்னியா டாப் டன் விருது (2004)

சித்திகா கபீர் (Siddiqua Kabir) (மே 7, 1931 - ஜனவரி 31, 2012) வங்காள தேச நாட்டைச் சேர்ந்த ஓர் ஊட்டச்சத்து நிபுணராவார். கல்வி, சமையல் புத்தக ஆசிரியர் மற்றும் சமையல் நிகழ்ச்சி தொலைக்காட்சி தொகுப்பாளர் என்று பன்முகங்களுடன் இவர் இயங்கினார். ஒரு பேராசிரியரான சித்திகா வங்காளதேச தேசிய தொலைக்காட்சியில் சித்திகா கபீரின் செய்முறை என்ற நிகழ்ச்சி உட்பட வங்காளதேச உணவு வகைகளை உள்ளடக்கிய பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக நடித்தார்.[1][2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

சித்திகா கபீர் 1931 ஆம் ஆண்டு மே மாதம் ஏழாம் தேதியன்று டாக்காவில் பிறந்தார்.[2] ஆறு குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் சித்திகா இரண்டாவது குழந்தையாக இருந்தார்.[3] 17 வயதில் சித்திகா தன் தந்தையை இழந்தார்.[3] மிகவும் பிரகாசமான மாணவி, சித்திகா ஈடன் பெண்கள் கல்லூரியில் கணித விரிவுரையாளராக அரசாங்கத்தின் கல்விப் பிரிவில் சேர்ந்தார். 1961 ஃபோர்டு அறக்கட்டளையிலிருந்து தனது இரண்டாவது முதுகலைக்கான உதவித்தொகையைப் பெற்றபோது அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கண்டார். ஓக்லகோமா மாநில பல்கலைக்கழகத்தில் உணவு, ஊட்டச்சத்து மற்றும் நிறுவன நிர்வாகம் குறித்த படிப்பை முடிப்பதற்காக அவர் அமெரிக்கா சென்றார், மேலும் 1963 இல் அதே பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[4]

தொழில்

[தொகு]

சித்திகா 1957 ஆம் ஆண்டு டாக்காவின் அசிம்பூரில் உள்ள ஈடன் பெண்கள் கல்லூரியின் கணிதத் துறையில் சேர்ந்து தனது ஆசிரியர் பணியைத் தொடங்கினார்.[1] டாக்காவின் அசிம்பூரில் உள்ள வீட்டுப் பொருளாதாரக் கல்லூரியின் ஊட்டச்சத்துத் துறையில் சேர்ந்தார். அங்கிருந்து பணியாற்றிய இவர் 1993 ஆம் ஆண்டில் முதல்வராக ஓய்வு பெற்றார்.[2]

சித்திகா 1966 ஆம் ஆண்டில் தனது முதல் தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சியில் தோன்றினார். பல சமையல் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் விருந்தினராகவும் நீண்டதொரு தொலைக்காட்சி நிகழ்ச்சி வாழ்க்கையை நடத்தினார்.[1] உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்து அவர் பெற்ற அறிவைப் பயன்படுத்தி, 1978 ஆம் ஆண்டில் மிகவும் பிரபலமான "ரன்னா கட்டோ புசுட்டி என்ற நூலை வெளியிட்டார். - "வங்காளதேச கறி சமையல் புத்தகம்" உள்ளிட்ட பல சமையல் புத்தகங்களையும் சித்திகா எழுதினார்.சுவையான மற்றும் சத்தான உணவு தொடர்பான சமையல் கலையை வெளிப்படுத்தினார் [5] இரதுனி, தானோ மற்றும் நெசுலே போன்ற முக்கிய வெளிநாட்டு மற்றும் வங்காளதேச நுகர்வோர் உணவு வணிகக்குறியீட்டு வகை நிறுவனங்களுக்கான ஆலோசகர் பணிக்கு இவரது தொழில் மேலும் வழிவகுத்தது.[1][2]

சித்திகா கபீரின் நான்கு குழந்தைகள், கணவர் மற்றும் இளைய சகோதரர் அடங்கிய நடுவர் குழு - இவரது சமையல் சாகசத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தனர். 2009 ஆம் ஆண்டு செல்டெக்கு விருது உட்பட உணவு மற்றும் தொலைக்காட்சித் துறைகளிலிருந்து சித்திகா கபீர் பல விருதுகளைப் பெற்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் இறப்பு

[தொகு]

பத்திரிக்கையாளரும் வங்காளதேச வங்கியின் முன்னாள் துணை ஆளுநருமான சையத் அலி கபீரை சித்திகா மணந்தார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர். சரினா நகர் கபீர் மற்றும் சகனாசு அகமது சந்தனா என்பது அவர்களின் பெயர்களாகும்.[4] நடிகை சாரா சாகர் இவரது மருமகள் முறை உறவாகும்.[4]

சித்திகா கபீர் 2012 ஆம் ஆண்டு சனவரி மாதம் 31 அன்று டாக்காவில் உள்ள சதுக்க மருத்துவமனையில் இறந்தார்.[1][2] அப்போது சித்திகாவிற்கு 80 வயதாகும்.

விருதுகள்

[தொகு]
  • அனன்னியா டாப் டென் விருதுகள் (2004)

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Siddiqua Kabir passes away". The Daily Star (Bangladesh). 2012-01-31. http://www.thedailystar.net/newDesign/latest_news.php?nid=35504. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Siddiqua Kabir passes away". The News Today (Bangladesh). 2012-02-01 இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304091640/http://www.newstoday.com.bd/index.php?option=details&news_id=52048&date=2012-02-01. 
  3. 3.0 3.1 Zarina Nahar Kabir (January 31, 2017). "My mother: A legend". http://www.thedailystar.net/opinion/tribute/my-mother-legend-1353379. பார்த்த நாள்: January 31, 2017. 
  4. 4.0 4.1 4.2 Fayeka Zabeen Siddiqua (May 6, 2016). "Remembering the Legend Siddiqua Kabir". The Daily Star. http://www.thedailystar.net/star-weekend/spotlight/remembering-the-legend-siddiqua-kabir-1219087. பார்த்த நாள்: May 6, 2016. 
  5. "Siddiqua Kabir passes away". bdnews24.com. 2012-01-31. https://bdnews24.com/bangladesh/2012/01/31/siddiqua-kabir-passes-away. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திகா_கபீர்&oldid=3908863" இலிருந்து மீள்விக்கப்பட்டது