சித்தார்த் ஷுக்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சித்தார்த் ஷுக்லா
Bigg-Boss-OTT-Sidharth-Shukla-looks-dapper-Shehnaaz-Gill-keeps-it-vibrant-in-Patiala-suit-6 (cropped).jpg
2021 இல் சித்தார்த் ஷுக்லா
பிறப்பு12 திசம்பர் 1980 (1980-12-12) (அகவை 40)
இறப்பு2 செப்டம்பர் 2021(2021-09-02) (அகவை 40)
மும்பை,இந்தியா
இறப்பிற்கான
காரணம்
மாரடைப்பு
இருப்பிடம்மும்பை, இந்தியா
பணிநடிகர்,மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2008-2021

சித்தார்த் ஷுக்லா என்பவர் ஒரு இந்திய நடிகரும் மாடலும் ஆவார். இவர் பாலிகா வது என்ற இந்தி தொடரில் “ஷிவ்ராஜ்" கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். இவர் 2014ம் வருடத்தில் வருண் தவான் நடித்த ஹம்டி ஷர்மா கி துல்ஹானியா என்ற படத்தில் ஒரு துணைக்கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இப்படத்தில் அவர் தனது நடிப்பிற்காக 2015ம் ஆண்டு ஸ்டார் டஸ்ட் அவார்ட்ஸ் நிகழ்வில் சிறந்த திருப்புமுனை நடிப்பு விருதும் பெற்றார்.[1]

ஷுக்லா 2016ம் ஆண்டு கலர்ஸ் டிவியின் கத்ரோன் கே கிலாடி என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று அதில் வெற்றியும் பெற்றார்.[2] அவர் கலர்ஸ் டிவியில் தில் ஸே தில் தக் என்ற இந்தி தொடரில் நடித்து வந்தார்.

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 13 நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆவார்.

2021 செப்டம்பர் 2 ஆம் தேதி காலை மாரடைப்பால் காலமானார்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தார்த்_ஷுக்லா&oldid=3270748" இருந்து மீள்விக்கப்பட்டது