சித்தார்த் ராய் கபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தார்த் ராய் கபூர்
பிறப்பு2 ஆகத்து 1974 (1974-08-02) (அகவை 49)
மும்பை, இந்தியா
பணிதிரைப்படங்கள் தயாரிப்பாளார்
வாழ்க்கைத்
துணை
வித்யா பாலன் (2012 முதல்)

சித்தார்த் ராய் கபூர் இந்தியத் திரைப்படங்கள் தயாரிப்பாளார் மற்றும் ராஜ் கபூர் பிலிம்ஸ் நிறுவனத்தினை நிறுவியவராவார். மேலும் வால்ட் டிஸ்னி, இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஆவார். இவர் ஆகத்து 2, 1974 இல் மும்பையில் பிறந்தவர்.[1][2]

பிறப்பு மற்றும் வள்ர்ப்பு[தொகு]

சித்தார்த் ராய் கபூர் மும்பையில் ஆகத்து மாதம் 2, 1974 அன்று பிறந்தார். பள்ளிக்கல்வியை இவர் ஜி. டி. சோமனி நினைவுப் பள்ளியில் முடித்தார். சித்தென்கம் கல்லூரியில் பொருளாதாரம் படித்தார். கல்லூரியில் படிக்கும் போது கல்லூரியின் வருட இதழின் தொகுப்பாளராக சித்தார்த் ராய் கபூர் இருந்துள்ளார். இவரின் தாய் சலோம் ராய் கபூர். இவர் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார் மேலும் இவர் முன்னால் இந்திய அழகி ஆவார். சித்தார்த்தின் சகோதரர்கள் ஆதித்யா ராய் கபூர் மற்றும் குனல் ராய் கபூர். சித்தார்த் ராய் கபூர் 2012 ஆம் ஆண்டு நடிகை வித்யா பாலனை மணந்தார்.

தொழில்[தொகு]

சித்தார்த் ராய் கபூர் தனது தொழிலை பிரொக்டர் அன்ட் கேம்பிள் நிறுவனத்திலிருந்து ஆரம்பித்தார். பிரொக்டர் அன்ட் கேம்பிள் நிறுவனத்திலிருந்து விஜய் குழுமத்திற்கு மாறினார். விஜய் குழுமத்தில் கோன் பனேகா க்ரோர் பதி நிகழ்ச்சியை சந்தைப்படுத்தும் வேலைகளைச் செய்தார். இந்நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் குழும தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடைய சந்தைப்படுத்துதலின் மேலாளராக துபாயிலும், அதிலிருந்து பதவி உயர்வு அடைந்து சந்தைப்படுத்துதலின் இயக்குனராக ஆங்காங்கிளும் வேலைப்பார்த்தார்.

திரைப்படங்கள்[தொகு]

தயாரிப்பாளராக பணிபுரிந்த திரைப்படங்கள்[தொகு]

ஜக்கா ஜசூஸ் (2017)
தங்கல் (2016) - தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் உருவான திரைப்படம்
மொகெஞ்ச தாரோ (2016)
ஃபிட்டூர் (2016)
புறம்போக்கு என்கிற பொதுவுடைமை- தமிழ்த் திரைப்படம்(2015)
கட்டி பட்டி (2015)
யட்சன் - தமிழ்த் திரைப்படம்(2015)
ஃபன்டோம் (2015)
ஏபிசிடி 2 (2015)
பிலிம்ஸ்டன் (2014)
பிட்ஜா (2014)
ராஜா நட்வர்லால் (2014)
குப்சூரட் (2014)
ஹைடர் (2014)
இவன் வேறமாதிரி - தமிழ்த் திரைப்படம்(2013)
ஷாகித் (2011)
சிகரம் தொடு - தமிழ்த் திரைப்படம்(2013)
சத்யாகிரஹா (2013)
சென்னை எக்ஸ்பிரஸ் (2013)
கேங்சக்கர் (2013)
தீயா வேல செய்யனும் குமாரு - தமிழ்த் திரைப்படம் (2013)
சேட்டை - தமிழ்த் திரைப்படம் (2013) கை போ சே - தமிழ்த் திரைப்படம் (2013) ஏபிசிடி (2013) லவ் ஷுவ் டே சிக்கன் குரானா (2012) தாண்டவம் - தமிழ்த் திரைப்படம் (2012) ஹிரோயின் (2012) ஹஸ்பண்ட்ஸ் இன் கோவா - மலையாளத் திரைப்படம் (2012) பர்ஃபி (2012)
முகமூடி - தமிழ்த் திரைப்படம் (2012)
அர்ஜூன் - த வாரியர் பிரின்ஸ் (2012)
கலகலப்பு - தமிழ்த் திரைப்படம் (2012)
கிராண்ட் மாஸ்டர் - மலையாளத் திரைப்படம் (2012)
வேட்டை - தமிழ்த் திரைப்படம் (2012)

இணை தயாரிப்பாளராக பணிபுரிந்த திரைப்படங்கள்[தொகு]

ஜோதா அக்பர் (2009)
ஃபேசன் (2008)
ஆமிர் (2008)
எ வெனஸ்டே (2008)
டெவ் டி (2009)
காமினி (2009)
ராஜ் நீதி (2010)
உதான் (2010)
பீப்லி (2010)
நோ ஒன் கில்டு ஜெஸ்ஸிகா (2011)
டெல்லி பெல்லி (2011)
சில்லர் பார்ட்டி (2011)
பான் சிங் டோமர் (2012)
ரெளடி ரதோர் (2012)
தி லன்ச் பாக்ஸ் (2013)

விருதுகள்[தொகு]

2009 – பிலிம் ஃபேர் விருதுவழங்கும் நிகழ்வில் சிறந்த திரைப்பட விருது ஜோதா அக்பர் திரைப்படத்திற்காக வாங்கினார்.
2012 – சிறந்த குழந்தைகள் திரைப்படமாக சில்லர் பார்ட்டி திரைப்படம் அங்கிகரிகக்கப்பட்டதற்கு தேசிய விருது
2013 – பான் சிங் டோமர் சிறந்த திரைப்படமாக அங்கிகரிக்கப்பட்டதற்கு தேசிய விருது
2013 – சிறந்த திரைப்படமாக ஃபர்ஃபி தேர்வு செய்யப்பட்டதற்கு ஜி சினிமா விருது, பிலிம் ஃபேர் விருது, ஐ.ஐ.எஃப்.ஏ விருது ஆகியவற்றை வாங்கினார்.
2013 – பான் சிங் டோமர் சிறந்த திரைப்படமாக அங்கிகரிக்கப்பட்டதற்கு திரைப்பட விருது
2013 – தொழில் முனைவோர் பிரிவில் 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் சாதனையாளர் விருது.
2017 – பிலிம் ஃபேர் விருதுவழங்கும் நிகழ்வில் சிறந்த திரைப்பட விருது தங்கல் திரைப்படத்திற்காக வாங்கினார்.

மேற்கோள்கள்[தொகு]