சித்தார்த்நகர்
சித்தார்த்நகர்
நௌகர் | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் சித்தார்த்நகரின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 27°18′02″N 83°05′40″E / 27.300501°N 83.094498°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | சித்தார்த் நகர் மாவட்டம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | சித்தார்த்நகர் நகராட்சி மன்றம் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 25,422 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
• வட்டார மொழி | அவதி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 272207 |
தொலைபேசி குறியீடு | 05544 |
வாகனப் பதிவு | UP-55 |
அருகமைந்த நகரங்கள் | கோரக்பூர், பஸ்தி |
இணையதளம் | siddharthnagar |
சித்தார்த்நகர் (Siddharthnagar) (இதன் பழைய பெயர்:நௌகர்), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நகரத்தின் பூர்வாஞ்சல் பிரதேசத்தில் உள்ள சித்தார்த் நகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு வடகிழக்கே 270.8 கிலோ மீட்டர் தொலைவிலும்; கோரக்பூருக்கு வடமேற்கே 98.1 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25 வார்டுகளும், 3,714 குடியிருப்புகளும் கொண்ட சித்தார்த்நகரின் மக்கள் தொகை 25,422 ஆகும். அதில் 13,064 ஆண்கள் மற்றும் 12,358 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14.86 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 946 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 78.65 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 5.66 % மற்றும் 0.77 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 63.26%, இசுலாமியர்35.96%, சீக்கியர்கள் 0.48% மற்றும் பிற சமயத்தினர் 0.29% வீதம் உள்ளனர்.[1]
போக்குவரத்து
[தொகு]கோரக்பூர்-கோண்டா நகரங்களை இணைக்கும் இருப்புப்பாதையில் சித்தார்த்நகர் தொடருந்து நிலையம் உள்ளது.[2] தேசிய நெடுஞ்சாலை எண் 730 இந்நகரத்திற்கு அருகில் செல்கிறது.[3]