உள்ளடக்கத்துக்குச் செல்

சித்தானைக்குட்டி சுவாமிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சித்தானைக்குட்டி சுவாமிகள் (இ. ஆகத்து 1951) ஈழத்தில் ஆன்மீக சாதனைகளில் சிறந்து விளங்கிய சித்தர்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இவரது இயற்பெயர் கோவிந்தசாமி என்பதாகும். இவரை தமிழ் நாடு, இராமநாதபுரம் மாவட்டம் பெருநாளி சமஸ்தானத் தலைவரின் புதல்வர் என்றும் கூறுவர். தமது சமஸ்தானத்தில் ஏற்பட்ட தொற்றுநோயைத் தடுக்க முயன்ற நவநாத சித்தரையும் பெரியானைக்குட்டி சுவாமிகளையும் சந்தித்தவர் அவர்களோடு கொழும்பு வந்தார்.

குருவான பெரியானைக்குட்டி சுவாமிகளின் ஆணைப்படி முன்னேசுவரம் சென்று அங்கு தங்கி பல சித்த சாதனைகள் புரிந்தார். தனது குரு சமாதியடைந்ததைத் தொடர்ந்து அவர் கதிர்காமம் சென்று திஸ்ஸமகாராமை என்ற இடத்தில் சிறிது காலம் தங்கி மட்டக்களப்பை அடைந்தார்.

சமாதி

[தொகு]

காரைதீவிலே 1951 ஆம் ஆண்டில் சமாதி அடைந்தார். அவருடைய சமாதி கோயிலில் ஆண்டு தோறும் ஆடிச் சுவாதி நட்சத்திரத்தில் அன்னாரின் நினைவாக குருபூசை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

வெளி இணைப்புகள்

[தொகு]