உள்ளடக்கத்துக்குச் செல்

சித்தாந்த சிரோன்மணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சித்தாந்த சிரோன்மணி ( சமஸ்கிருதம் : सिद्धांत शिरोमणी படைப்புகளின் மகுடம்[1] ) என்பது இந்தியாவின் பழமைவாய்ந்த ஒரு கணிதவியல் நூலாகும். இதை இயற்றியவர் இந்திய கணிதவியலாளரான இரண்டாம் பாஸ்கரர் என்பவராவார். இவரது 36 வயதில் கி.பி. 1150 ஆம் ஆண்டில் சித்தாந்த சிரோன்மணியை சமஸ்கிருத‍த்தில் எழுதினார். இந்நூல் 1450 செய்யுள்களுடன் உள்ளது.[2]

பாகங்கள்

[தொகு]

லீலாவதி

[தொகு]

புத்தகத்தின் இந்த பாக நூலின் பெயர் அவரது மகள், லீலாவதி பெயரில் இருந்து வந்த‍து. இது சித்தாந்த சிரோன்மணி நூலின் முதல் தொகுதி நூலாகும். இந்த பாகம் எண் கணிதத்தைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டது. இது பதின்மூன்று அதிகாரங்களுடன், 278 செய்யுள்கள் கொண்டு கணிதப் புதிர் வடிவில் சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளன. இந்தியாவில் கணிதப் புதிர் புத்தகங்களில் முன்னோடி நூல் இதுவே.

பிஜ கணிதம்

[தொகு]

இது சித்தாந்த சிரோமணியின் இரண்டாவது தொகுதி ஆகும். இது, ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, 213 செய்யுள்களைக் கொண்டு உள்ளது. இப்பகுதி அல்ஜிப்ராவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதாக உள்ளது .

கிரஹ கணிதம் மற்றும் கோளத்யாயம்

[தொகு]

சித்தார்த்த சிரோமணி நூலின் மூன்றாம் மற்றும் நான்காம் பகுதிகளான கிரஹ கணிதம் மற்றும் கோளத்யாயம் ஆகியவை கோள்களை விளக்கும் புத்தகத்துக்குத் தேவையான வானியல் செய்திகளும் இதில் காணப்படுகின்றன இவை 900 செய்யுள்களைக் கொண்டதாக உள்ளன.[3] (கிரஹ கணிதம் 451 மற்றும் கோளத்யாயம் 501 செய்யுள்களைக் கொண்டு உள்ளன).

மேற்கோள்கள்

[தொகு]
  1. Plofker 2009, ப. 71.
  2. "khagol Maandal". Archived from the original on 2012-04-20. பார்க்கப்பட்ட நாள் 2017-01-01.
  3. "BHASKAR'S ASTRONOMY".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தாந்த_சிரோன்மணி&oldid=3598432" இலிருந்து மீள்விக்கப்பட்டது