சித்தரஞ்சன் அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தரஞ்சன் அரண்மனை

சித்தரஞ்சன் அரண்மனை (Chittaranjan Palace) என்பது மைசூரில் அதிகம் அறியப்படாத அரண்மனை ஆகும். இது முதலில் மைசூர் அரச குடும்பத்தின் இளவரசிக்காக கட்டப்பட்டது. இது தற்போது " பசுமை வுடுதியாக பரணிடப்பட்டது 2021-02-20 at the வந்தவழி இயந்திரம் " உள்ளது. இது 31 அறைகளைக் கொண்ட ஒரு சிறிய விடுதியும் சுற்றுசூழல் அமைப்புடன் இயங்குகிறது (சூரிய சக்தி, ஏசி இல்லை, தொலைக்காட்சி இல்லை போன்றவை). விடுதியிலிருந்து கிடைக்கும் லாபம் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. [1]

வரலாறு[தொகு]

இந்த அரண்மனை மைசூர் மகாராஜாவால் தனது சகோதரிக்காக 1916 இல் கட்டப்பட்டது. இந்த அரண்மனை மைசூர் குடும்பத்திற்கு விற்கப்பட்டது. பின்னர் அதை "பிரீமியர் ஸ்டுடியோஸ்" என்ற திரைப்பட நிறுவனத்தின் தலைமையகமாக மாற்றப்பட்டது. புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரான தி ஸ்வார்ட் ஆஃப் திப்பு சுல்தான் உட்பட பல படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இங்கு படமாக்கப்பட்டன. தீ விபத்துக்குள்ளான பின்னர் திரைப்பட அரங்கம் மூடப்பட்டது. ஆனால் தற்போதும் பிரீமியர் ஸ்டுடியோவுக்கு சொந்தமான அதே குடும்பத்தினரால் இயக்கப்படுகிறது. 1970 களில் "கிரீன் ஹோட்டல்" [2] என்று அழைக்கப்படும் விடுதியாக மாற்றப்படும் வரை இந்த கட்டிடம் ஒரு தனி இல்லமாக பயன்படுத்தப்பட்டது. அதே குடும்பத்தில் விடுதியிலும், ஒட்டுமொத்த குடியிருப்பிலும் இன்னும் பெரிய பங்கு உள்ளது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://hippie-inheels.com/green-hotel-mysore-a-princess-palace
  2. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தரஞ்சன்_அரண்மனை&oldid=3553905" இருந்து மீள்விக்கப்பட்டது