சித்தப்ப சாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சித்தப்ப சாமி என்பவர் நாட்டார் தெய்வங்களில் ஒருவராவார். இவர் குரும்பர் இன மக்களின் குலதெய்வமாக வழிபடப் படுகிறார். [1]

பெயர்காரணம்[தொகு]

சித்திரகம் என்றால் சிறுத்தைப் புலி என்ற விலங்காகும். அதனை கொல்ல முனைந்து இறந்தவர் என்பதால் சித்திரக சாமி எனவோ,சிறு(த்)தா சாமி எனவோ அழைக்கப்பட்டு அப்பெயர் மருவியிருக்கலாம்.

சித்தப்ப என்பது சிறிய அப்பன் என்ற நேரடி பொருளை தருகிறது. இதனை சித்திகள் பெற்ற அப்பன் என்று கூறலாம். ஆனால் இவை இவ்விடத்தில் ஏற்பதற்கில்லை. [1]

நடுகல் வழிபாடு[தொகு]

குரும்பர் இன மக்களின் சித்தப்ப சாமி வழிபாடு ஒரு நடுகல் வழிபாடாக உள்ளது. இது இயற்கை வழிபாட்டிற்கு பிறகு இந்துக்கள் மேற்கொண்ட வழிபாடு முறையாகும்.

இக்கோயிலில் சித்தப்ப சாமி நடுகல் உள்ளது. அதில் புலியொன்று ஆட்டினைக் கொல்வது போலவும். அப்புலியை வீரன் கொல்வது போலவும் சித்தரிக்கப் பட்டுள்ளது. இந்த வகை நடுகல்லினை புலிகுத்திப்பட்டான் நடுகல் என்று ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். [1]

கோயில்[தொகு]

பெலமாதனஹள்ளி சித்தப்ப சாமி கோயில், பாலக்கோடு, தருமபுரி மாவட்டம். [1]


ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 அத்தியாயம் 7 - நெல் உகுத்துப் பரவும் கடவுளரின் தற்காலப் பெயர்கள் - 2: த. பார்த்திபன்: Oct 16, 2015
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தப்ப_சாமி&oldid=2084643" இலிருந்து மீள்விக்கப்பட்டது