சிதறொளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஓர் ஊடகத்தினூடே ஒளிக்கற்றைச் செல்லும் போது ஊடகத்திலுள்ள நுண்துகள்களால் ஒளியானது நாலாபக்கமும் சிதறடிக்கப்படுகிறது. இவ்வாறு விலக்கமுற்ற ஒளி சிதறொளி (Scattered rays) எனப்படுகிறது. ஒளிச் சிதறலால் தான் ஒளிக்கற்றையின் பாதையினை நம்மால் காணமுடிகிறது.

கதிரியலில், எக்சு-கதிர்கள் நோயாளியின் உடல் வழி செல்லும் போது, பலவகையான அணுக்களால் சிதறடிக்கப்படுகின்றன. இந்த சிதறிய கதிர்கள் எக்சு கதிர் படத்தின் ஒப்புமையினை (Contrast) பாதிக்கின்றன. இதனைத் தவிர்க்க கிரிட்(Grid) பயன்படுத்தப்படுகிறது. நல்ல கதிர்படம் பெறப்பட்டாலும் சற்று அதிக கதிர் ஏற்பளவினை நோயாளிக்குக் கொடுக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிதறொளி&oldid=2056573" இருந்து மீள்விக்கப்பட்டது