சிதம்பர சந்திரசேகரன்
சிதம்பர சந்திரசேகரன் (Chidambara Chandrasekaran, 1911–2000) என்பவர் ஒரு குறிப்பிடத்தக்க இந்திய மக்கள்தொகை ஆய்வாளரும், புள்ளியியல் நிபுணரும் ஆவார். இவர் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் கல்வி பயின்றார். நாக்பூரில் உள்ள மோரிஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார், அதைத் தொடர்ந்து நாக்பூர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும், 1938 இல் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் புள்ளியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார். 1947 இல் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சுகாதாரம் மற்றும் பொது சுகாதாரப் பள்ளியிலிருந்து இவருக்கு எம்.பி.எச் பட்டம் வழங்கப்பட்டது.
சில வெளியீடுகளில் இவரது பெயர் "சந்திர சேகர்" என்று பலுக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்க. இவர் நோபல் பரிசு பெற்ற இருவருடன் தொடர்புடையவர்: ச. வெ. இராமன் இவரது மாமா, சுப்பிரமணியன் சந்திரசேகர் இவரது உறவினர்.
தொழில் வாழ்க்கை
[தொகு]இவர் ஐக்கிய நாடுகள் அவை மற்றும் உலக வங்கியில் பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார். சர்வதேச மக்கள்தொகை அறிவியல் ஆய்வு ஒன்றியத்தின் (IUSSP) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1969 முதல் 1973 வரை அந்தப் பதவியில் இருந்தார். பல்வேறு இந்தியப் பல்கலைக்கழகங்களில் கல்வியியல் பதவிகளை வகித்தார். 1941 முதல் 1948 வரை மற்றும் 1954–8 வரை அகில இந்திய சுகாதாரம் மற்றும் பொது சுகாதார நிறுவனத்தில் (அப்போது கல்கத்தா பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக இருந்தது) உயிரியல் புள்ளியியல் பேராசிரியராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து 1959 முதல் 1964 வரை மும்பையில் உள்ள மக்கள்தொகை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக (பின்னர் சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனம் என பெயர் மாற்றப்பட்டது) பணியாற்றினார்.
ஆய்வுகள்
[தொகு]ஐக்கிய நாடுகள் அவை மற்றும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் செய்யப்பட்ட மைசூர் மக்கள்தொகை ஆய்வின் முதன்மை ஆய்வாளராக சந்திரசேகரன் இருந்தார். இது வளரும் நாட்டில் கருத்தடை பயன்பாடு உள்ளிட்ட கருவுறுதல் தொடர்பான தகவல்களை சேகரிப்பதிலும், கருவளக் காரணிகள் குறித்த பகுப்பாய்வுகளுக்கு அத்தகைய தரவுகளைப் பயன்படுத்தலாம் என்பதை நிரூபிப்பதிலும் ஒரு முன்னோடி கணக்கெடுப்பாகும். இந்தியாவில் பார்சிகளின் மக்கள்தொகை குறைதல் மற்றும் வங்காள பெண்களின் இனப்பெருக்க முறைகள் குறித்தும் ஆராய்ந்தார்.
சந்திரசேகரன் இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு கொள்கையை தீவிரமாக ஊக்குவிப்பவராக இருந்தார். மேலும் குறைந்தபட்சம் ஒரு சந்தர்ப்பத்திலாவது மறைந்த இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவுக்கு மக்கள்தொகை குறைத்தல் தொடர்பான விஷயங்களில் ஆலோசனை வழங்கினார்.
சான்றுகள்
[தொகு]The Life and Works of a Demographer: An Autobiography. 1999. by Chidambara Chandrasekaran. New Delhi: Tata McGraw-Hill.
See also John C. Caldwell review of the book published in Population Studies, vol. 54 no. 3, pp. 354–5.