சிதம்பராக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிதம்பராக் கல்லூரி

யாழ் / வல்வை சிதம்பராக் கல்லூரி (J/ Valvai Chithambara College) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பிரிவில் உள்ள வல்வெட்டித்துறை எனும் இடத்தில் அமைந்துள்ளது. இது வல்வெட்டித்துறையின் மேற்கே கடற்கரையோரமாக அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

ஒரு நூற்றாண்டு கால வரலாற்றைக்கொண்ட இக்கல்லூரி திரு கு. சிதம்பரம்பிள்ளை என்பவரால் 1896 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 11ஆம் திகதி வல்வை முத்துமாரி அம்மன் கோவிலுக்கு அருகாமையிலுள்ள 'ஆலடியில்' சிதம்பர வித்தியாலயம் என்னும் பெயரில் முதன்முதல் ஆரம்பிக்கப்பட்டது.

இப்பாடசாலையின் வளர்ச்சியின் முதல்கட்டமாக 1912 தற்போதைய நிலையமான ஊரிக்காடு எனும் இடத்துக்கு நிரந்தரமாக இடமாற்றம் செய்யப்பட்டது.

ஐந்தாம் வகுப்பு வரையுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை 1923 ஆம் அண்டு கனிஷ்ட பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது. பின் 1928 இல் கேம்பிரிஜ் சீனியர் பரீட்சைக்கு மாணவர்கள் தொற்றுவதற்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டது. 1935 ஆம் ஆண்டு லண்டன் 'மற்றிக்குலேஷன்' பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றுவதற்கு ஏதுவாக வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. இக்கால கட்டத்தில் ஹாட்லிக் கல்லூரிக்கு அடுத்தபடியாக தரம் னு யைப் பெற்ற பாடசாலையாகும். இங்கு லண்டன் மற்றிக்குலேஷன் பரீட்சை வகுப்புக்களைத் தொடர்ந்து சிரேஷ்ட பாடசாலைத் தராதர வகுப்புக்கள் 1942 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டன.

இக் கல்லூரி கல்வியாளர்களை உருவாக்குவதில் சாதனை படைத்தது மட்டுமல்லாது சாரணியம், விளையாட்டுத்துறை போன்றவற்றிலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடமையாற்றிய அதிபர்கள் / முதன்மை ஆசிரியர்கள்[தொகு]

 • 1896–1901 திரு விநாயகம் முதலியார், திரு.ஏ. நாகமுத்து, திரு.வீ. அருணாசலம்
 • 1901–1960 திரு ஞா. தையல்பாகர்
 • 1975–1994 திரு கோ. செல்வவிநாயகம்
 • 1994–1996 திரு செ. யோகச்சந்திரன்
 • 1996–1998 திரு சி. தங்கராசா
 • 1998–2002 திரு செ. யோகச்சந்திரன்

பிரபலமான பழைய மாணவர்கள்[தொகு]

 • உயர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன்
 • திரு எஸ். சிவசுப்ரமணியம் - (S.L.A.S, ஓய்வு பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டாளர்)
 • திரு வேலும் மயிலும் - (S.L.A.S, ஓய்வு பெற்ற பிரதேச செயலர்)
 • திரு ந.யோகசிகாமணி - உயர் நீதிமன்ற நீதிபதி
 • திரு P.பாலவடிவேல் - ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி
 • Dr.பொன். பாலகிருஸ்னன் - ஓய்வு பெற்ற மாவட்ட வைத்திய அதிகாரி

மேற்கோள்கள்[தொகு]

சிதம்பராக் கல்லூரி ஆண்டுவிழா மலர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிதம்பராக்_கல்லூரி&oldid=3901617" இலிருந்து மீள்விக்கப்பட்டது