உள்ளடக்கத்துக்குச் செல்

சிட்வேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிட்வேல்
Chitvel
அடைபெயர்(கள்): சிட்வேலு
சிட்வேல்Chitvel is located in ஆந்திரப் பிரதேசம்
சிட்வேல்Chitvel
சிட்வேல்
Chitvel
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 14°10′00″N 79°20′00″E / 14.1667°N 79.3333°E / 14.1667; 79.3333
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்திருப்பதி
ஏற்றம்
132 m (433 ft)
மொழிகள்
  Officialதெலுங்கு, உருது
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
516104
தொலைபேசி குறியீடு08566
வாகனப் பதிவுAP-04, AP-39
சிட்வேல் அருகில் ஓபுலவரிப்பள்ளே – கிருட்டிணப்பட்டணம் இரயில்வே சுரங்கம்
எல்லம்மா ராசூ ஏரி . சிட்வேல்

சிட்வேல் (Chitvel) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமம் இராயலசீமை பிராந்தியத்தில் உள்ள திருப்பதி மாவட்டத்தின் சிட்வேல் மண்டலத்தில் அமைந்துள்ளது. சிட்வேல் மற்றும் இராப்பூர் இடையே இந்தியாவின் மிக நீளமான மின்மயமாக்கப்பட்ட 6.6 கி.மீ நீளம் கொண்ட இரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த இரயில் பாதை ஓபுலவாரிப்பள்ளி மற்றும் கிருட்டிணப்பட்டினம் துறைமுகத்தை இணைக்கிறது. 2019-ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 21-ஆம் தேதியன்று துணை குடியரசுத் தலைவர் எம். வெங்கையா நாயுடு இப்பாதையை திறந்து வைத்தார். இப்பாதை இப்பகுதியின் முக்கிய இரயில் பாதையாகும்.[1]

இப்பகுதியில் உள்ள சிவபெருமான் கோயிலும் குண்டலகோனா மற்றும் குட்டமனேரு அணையும் சிட்வேலைச் சுற்றியுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் ஆகும்.

குண்டலகோனா நீர்வீழ்ச்சி

புவியியல்

[தொகு]
சிட்வேலில் ராப்பூர் & சிட்வேல் காட் சாலை

14°10′00″N 79°20′00″E / 14.1667°N 79.3333°E / 14.1667; 79.3333.[2] என்ற புவியியல் கூறுகளில் கடல் மட்டத்திலிருந்து 132 மீட்டர் (436 அடி) உயரத்தில் சிட்வேல் கிராமம் அமைந்துள்ளது.

குறிப்பிடத்தக்க நபர்

[தொகு]

தெலுங்கு திரைப்படத் துறையின் பாடகர், பாடலாசிரியர் மற்றும் கவிஞரான பெஞ்சல் தாசு இக்கிராமத்தைச் சேர்ந்தவராவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Revenue Divisions and Mandals". Official website of YSR Kadapa District. National Informatics Centre- Kadapa, Andhra Pradesh. Archived from the original on 6 July 2015. Retrieved 23 May 2015.
  2. Falling Rain Genomics.Chitvel
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்வேல்&oldid=4563162" இலிருந்து மீள்விக்கப்பட்டது