சிட்ரோனெல்லால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Citronellal[1]
Skeletal formula of (+)-citronellal
Ball-and-stick model of the (+)-citronellal molecule
(+)-சிட்ரோனெல்லால்
Ball-and-stick model of the (-)-citronellal molecule
(-)-சிட்ரோனெல்லால்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3,7-டைமெத்திலாக்ட்-6-ஈனால்
இனங்காட்டிகள்
106-23-0 Yes check.svgY
ChEBI CHEBI:47856 Yes check.svgY
ChEMBL ChEMBL447944 Yes check.svgY
ChemSpider 7506 Yes check.svgY
EC number 203-376-6
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG C17384 Yes check.svgY
பப்கெம் 7794
UNII QB99VZZ7GZ Yes check.svgY
பண்புகள்
C10H18O
வாய்ப்பாட்டு எடை 154.25 கி/மோல்
அடர்த்தி 0.855 கி/செ.மீ3
கொதிநிலை 201 முதல் 207 °C (394 முதல் 405 °F; 474 முதல் 480 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

சிட்ரோனெல்லால் (citronellal) என்பது C10H18O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும் இதை ரோடினால் அல்லது 3,7-டைமெத்திலாக்ட்-6-ஈன்-1- ஆல் என்ற பெயர்களாலும் அழைப்பர். மோனோடெர்பீனாய்டு வகைச் சேர்மம் என்று சிட்ரோனெல்லால் வகைப்படுத்தப்படுகிறது. சிட்ரோனெல்லா எண்ணெய்க்கு அதன் தனித்துவமான எலுமிச்சை வாசனையை வழங்கும் டெர்பீனாய்டு வேதிச் சேர்மங்களின் கலவையில் இது முக்கிய கூறு ஆகும்.

சிம்போபோகோன் எனப்படும் எலுமிச்சைப்புல், கோரிம்பியா சிட்ரியோதோரா எனப்படும் மரம், லெப்டோசிபெர்னம் பீட்டர்சோனை எனப்படும் புதர்ச்செடி போன்ற தாவரங்களின் காய்ச்சி வடிகட்டிய எண்ணெயின் பிரதானமான உட்பொருள் சிட்ரோனெல்லா ஆகும்.[2] காப்பிர் எலுமிச்சைப்பழத்தின் இலைகளிலிருந்து பெறப்படும் எண்ணெயின் 80% சிட்ரோனெல்லின் (–)-(எசு)-ஆடியெதிர் மாற்றுருவால் ஆக்கப்பட்டுள்ளது. இதுவே அந்நறுமனத்திற்கான அடையாளமாகவும் கருதப்படுகிறது.

சிட்ரோனெல்லா ஒரு பூச்சி விரட்டியாகும். குறிப்பாக கொசுக்களை விரட்டும் பண்பு இதில் அதிகமுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[3] மேலும் இது பூசண எதிர்ப்பியாகவும் செயல்படவல்லது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Citronellal, The Merck Index, 12th Edition
  2. Mahalwal, Vijender S.; Ali, Mohd. (2003). "Volatile constituents ofCymbopogon nardus (Linn.) Rendle". Flavour and Fragrance Journal 18: 73. doi:10.1002/ffj.1144. 
  3. Jeong-Kyu KIM; Chang-Soo KANG; Jong-Kwon LEE; Young-Ran KIM; Hye-Yun HAN; Hwa Kyung YUN (2005). "Evaluation of Repellency Effect of Two Natural Aroma Mosquito Repellent Compounds, Citronella and Citronellal". Entomological Research 35 (2): 117–120. doi:10.1111/j.1748-5967.2005.tb00146.x. 
  4. Kazuhiko NAKAHARA, Najeeb S. ALZOREKY1, Tadashi YOSHIHASHI, Huong T. T. NGUYEN and Gassinee TRAKOONTIVAKORN (2003). "Chemical Composition and Antifungal Activity of Essential Oil from Cymbopogon nardus (Citronella Grass)". JARQ 37 (4). 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்ரோனெல்லால்&oldid=2786343" இருந்து மீள்விக்கப்பட்டது