உள்ளடக்கத்துக்குச் செல்

சிடெரோபைலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிடெரோபைலைட்டு
Siderophyllite
சின்வால்டைட்டு (சிடெரோபைலைட்டு – பாலிலித்தியோனைட்டு திண்மக் கரைசல் தொடர்)
பொதுவானாவை
வகைபைலோசிலிக்கேட்டு கனிமங்கள்
வேதி வாய்பாடுKFe2+2Al(Al2Si2)O10(F,OH)2
இனங்காணல்
நிறம்நீலப்பச்சை, அடர் பழுப்பு,கருப்பு.
படிக இயல்புமைக்கா போன்ற தகடு வடிவ அமைப்பு; போலி அறுகோணப் படிகங்கள்
படிக அமைப்புஒற்றைச்சரிவு
பிளப்புசரியான அடித்தளப் பிளவு
முறிவுசங்குருவம்
மோவின் அளவுகோல் வலிமை2.5
மிளிர்வுபளபளப்பும் மங்கலும்
கீற்றுவண்ணம்பசுமை சாம்பல்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும் முதல் ஒளிபுகாது வரை
ஒப்படர்த்தி3
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.582 nβ = 1.625 nγ = 1.625
இரட்டை ஒளிவிலகல்δ = 0.043
2V கோணம்4° (அளக்கப்பட்டது)
மேற்கோள்கள்[1][2][3]

சிடெரோபைலைட்டு (Siderophyllite) என்பது KFe2+2Al(Al2Si2)O10(F,OH)2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இக்கனிமம் சிலிக்கேட்டு கனிமங்களின் மைக்கா குழுவில் உள்ள ஓர் அரிய உறுப்பினராகும்.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் சிடெரோபைலைட்டு கனிமத்தை Sid[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

இந்த கனிமம் நெஃபெலின் சியனைட்டு நீரற்ற-சோடியம்-பொட்டாசியம்-அலுமினோசிலிகேட்டு புளுட்டானிக் பாறைகளில் மற்றும் கிரானைட்டு மற்றும் அப்லைட்டு வகை தீப்பாறைகளில் காணப்படுகிறது. கொலராடோவின் பைக்சு பீக்கில் மைக்ரோகிளின் மற்றும் ஆசுட்ரோபில்லைட்டு கனிமங்களுடன் இணைந்து காணப்படுகிறது. கியூபெக்கின் மாண்ட் செயின்ட்-இலேர் மலையில் உள்ள கார பெக்மடைட்டு பாறைகளிலும் காணப்படுகிறது.[3]

முதன்முதலில் 1880-ஆம் ஆண்டில் கொலராடோவின் பைக்சு பீக்கிற்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் கண்டறியப்பட்டு விவரிக்கப்பட்டது. இதன் பெயர் கிரேக்கச் சொற்களான 'சிடெரோசு' (இரும்பு) மற்றும் 'பில்லான்' (இலை) ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் அதன் இரும்புச்சத்து நிறைந்த கலவை மற்றும் சரியான அடிமட்டப் பிளவு ஆகியவற்றைக் குறிக்கிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Siderophyllite data on Webmineral
  2. 1 2 Siderophyllite on Mindat.org
  3. 1 2 Siderophyllite in the Handbook of Mineralogy
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிடெரோபைலைட்டு&oldid=4442143" இலிருந்து மீள்விக்கப்பட்டது