சிடில்லைட்டு
சிடில்லைட்டு Stilleite | |
---|---|
![]() சின்கோலோப்வே படிவிலிருந்து கிடைத்த சிடில்லைட்டின் ஒற்றை படிகத் திரட்டுகள் | |
பொதுவானாவை | |
வகை | செலீனைடு கனிமங்கள் |
வேதி வாய்பாடு | ZnSe |
இனங்காணல் | |
நிறம் | சாம்பல் |
படிக அமைப்பு | கனசதுரம் |
மோவின் அளவுகோல் வலிமை | 5 |
மிளிர்வு | உலோகத் தன்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது முதல் ஒளிகசியும் வரை |
ஒப்படர்த்தி | 5.42 |
ஒளியியல் பண்புகள் | சம உருவம் |
ஒளிவிலகல் எண் | 2.5 |
மேற்கோள்கள் | [1][2] |
சிடில்லைட்டு (Stilleite) ZnSe என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். செலீனைடு வகை கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. மற்ற செலீனைடு மற்றும் சல்பைடுகளுடன் தொடர்புடைய இலின்னைட்டில் சேர்ந்து நுண்ணிய சாம்பல் படிகங்களாக மட்டுமே இக்கனிமம் கண்டறியப்பட்டுள்ளது. முதன்முதலில் 1956 ஆம் ஆண்டு சைரின் கட்டங்கா மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. செருமன் புவியியலாளர் ஆன்சு சிடில் (1876–1966) நினைவாக கனிமத்திற்கு சிடில்லைட்டு எனப் பெயரிடப்பட்டது.[3]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் சிடில்லைட்டு கனிமத்தை Sll[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
அர்கெந்தீனாவின் லா ரியோச்சா மாகாணத்தில் உள்ள சாண்டா பிரிச்டா சுரங்கத்திலிருந்தும், செருமனியின் ஆர்சு மலைகளில் உள்ள தில்கெரோட்டு (அபெரோட்டு கிராமம்) மலைகளிலும் கிடைப்பதாகப் பதிவாகியுள்ளது.[1] தொடர்புடைய கனிமங்களில் காங்கோவின் சின்கோலோப்வே பகுதியில் கிடைக்கும் பைரைட்டு, இலினேட்டு, கிளாசுதலைட்டு, செலினியன் வெசைட்டு, மாலிப்டினைட்டு மற்றும் டோலமைட்டு ஆகியவை அடங்கும்); மேலும் அர்கெந்தினாவின் சாண்டா பிரிச்டா சுரங்கத்தில் டைமன்னைட்டு, கிளாசுதலைட்டு, யூக்கரைட்டு, உமாங்கைட்டு, குளோக்மன்னைட்டு ஆகியவையும் தொடர்பு கொண்ட கனிமங்களில் அடங்கும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Handbook of Mineralogy – Stilleite
- ↑ Mindat.org – Stilleite
- ↑ Webmineral.com – Stilleite
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.