சிடார் பிளையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சிடார் பிளையர் (Star Flyer) டென்மார்க் நாட்டின் தலைநகரமான கோபனேகன் நகரிலுள்ள திவோலி பொழுதுபோக்கு பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புகோபுர வகை சுழலும் இராட்டிணம் ஆகும். 80 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான ஊஞ்சல் சவாரிகளில் இதுவும் ஒன்றாகும். இச்சவாரி செய்தபடியே அந்நகரத்தின் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா மையங்களின் வியத்தகு காட்சிகளை காணமுடியும். ஆத்திரியா நாட்டைச் சேர்ந்த ஃபண்டைம் தயாரிப்பு நிறுவனம் இந்த சுழலும் இராட்டிணத்தை தயாரித்து 2006 ஆம் ஆண்டு மே மாதத்தில் திறந்து வைத்தது[1] .

புள்ளியியல்[தொகு]

  • உயரம் 80 m (260 அடி)
  • நடைமேடை விட்டம் 16 m (52 அடி)
  • இருக்கைகள் 12 (ஒவ்வொன்றும் 2 இருக்கை)
  • கொள்ளளவு 960 பயணிகள்/மணிக்கு
  • அதிகபட்ச சுழல் வேகம் 70 km/h (43 mph)
  • அதிகபட்ச செங்குத்து வேகம் 3 m/s (9.8 ft/s)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gasværket". Tivoli Gardens. Archived from the original on April 4, 2009. பார்க்கப்பட்ட நாள் 2010-01-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிடார்_பிளையர்&oldid=3586924" இலிருந்து மீள்விக்கப்பட்டது