சிடானாய்டைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிடானாய்டைட்டு
Stannoidite
பொதுவானாவை
வகைசல்பைடு கனிமம்
வேதி வாய்பாடுCu6+Cu22+(Fe2+,Zn)3Sn2S12
இனங்காணல்
நிறம்வெண்கல பழுப்பு
படிக இயல்புஒரே மாதிரியாக பிரித்தறிய முடியாத படிகங்கள் பெரிய பொதிகளாக உருவாகின்றன
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
பிளப்புஇல்லை
முறிவுசங்குருவம் – சமமற்று
மோவின் அளவுகோல் வலிமை4
மிளிர்வுஉலோகம்
கீற்றுவண்ணம்பழுப்பு, சாம்பல்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி4.29
மேற்கோள்கள்[1][2][3]

சிடானாய்டைட்டு (Stannoidite) என்பது Cu6+Cu22+(Fe2+,Zn)3Sn2S12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். தாமிரம், இரும்பு, கந்தகம், துத்தநாகம், வெள்ளீயம் ஆகிய தனிமங்கள் சேர்ந்துள்ள ஒரு சல்பைடு கனிமமாக இது தோன்றுகிறது. வெள்ளீயம் தனிமத்தைக் குறிக்கும் இலத்தின் மொழிச் சொல்லான சிடானம் என்பதையும் போன்ற என்பதைக் குறிக்கும் ஆய்டா என்ற சொல்லையும் சேர்த்து சிடானாய்டைட்டு என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. நீர்வெப்ப Cu-Sn படிவுகளில் பெரும்பாலும் சிடானாய்டைட்டு கனிமம் காணப்படுகிறது[1][2].

1969 ஆம் ஆண்டு சப்பான் நாட்டில் இருக்கும் ஒன்சூ தீவில் ஒக்காயமா நிர்வாகப் பிரிவில் கொஞ்சோ சுரங்கத்தில் முதன் முதலாக சிடானாய்டைட்டு கண்டுபிடிக்கப்பட்டது[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Stannoidite. Webmineral
  2. 2.0 2.1 2.2 Stannoidite. Mindat.org
  3. Kudoh Y., Takeuchi Y. (1976). "The superstructure of stannoidite". Zeitschrift für Kristallographie – Crystalline Materials 144 (1–6): 145. doi:10.1524/zkri.1976.144.16.145. Bibcode: 1976ZK....144..145K. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிடானாய்டைட்டு&oldid=2938684" இலிருந்து மீள்விக்கப்பட்டது