சிசிகியாவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிசிகியாவ் (Zisiqiao), சீனாவின் கிழக்குக் கோடியில் உள்ள செஜியாங் மாகணத்தின், டிகிங் கவுண்டியின் (Deqing County) கிழக்குக் கடைக்கோடியில் உள்ள சிங்சி நகரத்திற்கு (Xinshi Town) அருகில் உள்ளது.

1985 முதல் 600 பேர் கொண்ட இக்கிராமத்தினர், வீட்டிற்கு வீடு, சிறியதும், பெரியதுமான பாம்புப் பண்ணைகளைப் பராமரிப்பதால் இக்கிராமத்தை பாம்பு கிராமம் என்றும் அழைக்கப்படுகிறது.[1]இக்கிராமத்தின் தற்போதைய மக்கள்தொகையான 800 பேர்கள், வணிகப் பயன்பாட்டிற்காக, பாம்பு நச்சிற்கும், தோலுக்கும் மற்றும் இறைச்சிக்கும் ஆண்டிற்கு 30 இலட்சம் பாம்புகளை பண்ணைகளில் வளர்த்து இலட்சக்கணக்கில் பணத்தை ஈட்டுகின்றனர். இப்பாம்பு பண்ணையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பாம்பின் நச்சு மருத்துவப் பயன்பாட்டிற்கும், இறைச்சியை உணவு விடுதிகளுக்கும், தோலை அழகிய இடுப்பு வார்ப்பட்டைகளை செய்வதற்கும் பயன்படுத்துகின்றனர். [2][3][4]

சிசிகியாவ் கிராமம் அமைந்த டிகிங் கவுண்டியில் உள்ள பாம்புகளின் பண்பாட்டு அருங்காட்சியகம் உள்ளூர் சுற்றுலாப் பிரியர்களை கவர்வதாக உள்ளது. [5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chinese village bites into snake business பரணிடப்பட்டது 2015-11-29 at the வந்தவழி இயந்திரம், Reuters, 2011-06-20
  2. "600 மக்கள் - 30 லட்சம் பாம்புகள் - சீனாவில் ஒரு வினோத கிராமம்". Archived from the original on 2018-07-09. பார்க்கப்பட்ட நாள் 2018-07-09.
  3. China's 'Snake Village' seeks New Year riches, AFP, 2013-02-10
  4. 世界第一蛇村:800人与300万条蛇的神奇生活 ("World's No. 1 Snake Village: mysterious life of 800 people and over 3 million snakes"), travel.sina.com.cn, 2010-10-21
  5. 蛇文化博物馆可以让你看得“头皮发麻”[தொடர்பிழந்த இணைப்பு] (Snake Culture Museum will make your hair stand on end), 2012-05-07
  6. China's 'Snake Village' seeks New Year riches
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிசிகியாவ்&oldid=3584004" இலிருந்து மீள்விக்கப்பட்டது