சிசா
சிசா | |
---|---|
![]() | |
சாவகம் பச்சை மேக்பை, சிசா தலசினா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சிசா போயி, 1826
|
சிற்றினம் | |
|
சிசா (Cissa) என்பது ஒப்பீட்டளவில் குறுகிய வால் கொண்ட மேக்பை பறவைப் பேரினமாகும். இது சில சமயங்களில் வேட்டையாடும் சிசா என்று அழைக்கப்படுகிறது. இப்பேரினப் பறவைகள் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல தென்கிழக்காசியா மற்றும் இதனை ஒட்டிய பகுதிகளின் காடுகளில் வாழ்கின்றன. நான்கு சிற்றினங்கள் பிரகாசமான சிவப்பு நிற அலகுடன், பச்சை நிற இறகுகள், கருப்பு முகமூடி மற்றும் பழுப்பு இறக்கைகளுடன் மிகவும் காணப்படும்.
குறைந்த கரோட்டினாய்டு உணவின் காரணமாக[1] வளரிட பறவைகள் பெரும்பாலும் நீலம் அல்லது ஊதா நிறத்தில் காணப்படும்.
இவை ஊனுண்ணி வகையின. இவற்றின் முக்கியமான உணவாக கணுக்காலிகள் மற்றும் சிறிய முதுகெலும்பிகளை உள்ளன.
1826ஆம் ஆண்டில் ஜெர்மன் விலங்கியல் வல்லுநரான பிரெட்ரிக் பாய் என்பவரால் பொதுவான பச்சை மாக்பை (சிசா சினென்சிசு) மாதிரி சிற்றினமாக அறிமுகப்படுத்தப்பட்டது.[2] சிசா என்ற பெயர் பண்டைக் கிரேக்க கிசாவிலிருந்து வந்தது. இதன் பொருள்"மேக்பை" ஆகும்.
சிசா பேரினத்தில் நான்கு சிற்றினங்கள் உள்ளன:[3]
சிசா சிற்றினங்கள் | |||
---|---|---|---|
பொதுவான மற்றும் இருசொற் பெயர்கள் | படம் | விளக்கம் | சரகம் |
பச்சை மேக்பை (சிசா சினென்சிசு) |
![]() |
பொதுவான பச்சை மேக்பை நீண்ட வால் இறகுகள், கோடிட்ட கருப்பு மற்றும் வெள்ளை மூன்றாம் நிலைகள் மற்றும் ஒரு நுட்பமான மஞ்சள் முகட்டினை கொண்டிருக்கும். | கீழ் இமயமலை முதல் தென்கிழக்கு ஆசியாவின் பிரதான நிலப்பகுதி, அத்துடன் போர்னியோ மற்றும் சுமத்ரா |
இந்தோசீனா பச்சை மேக்பை (சிசா கைபோலூகா) |
![]() |
இந்த பேரினத்தின் தனித்துவமானது, இந்தோசீனா பச்சை மேக்பை மஞ்சள் நிற அடிவயிற்றைக் கொண்டுள்ளது | தென்கிழக்காசியா மற்றும் சீனாவின் அருகிலுள்ள பகுதிகள் |
சாவகம் பச்சை மேக்பை (சிசா தலசினா) |
![]() |
சாவகம் பச்சை மேக்பை குட்டையான வால் மற்றும் வெள்ளை மூன்றாம் நிலை இறகுகளைக் கொண்டது | சாவகம் |
போர்னியன் பச்சை மேக்பை (சிசா ஜெப்ரி) |
![]() |
போர்னியன் பச்சை மேக்பை சிற்றினம் மற்ற சிற்றினங்களைப் போலவே தோற்றமளிக்கின்றன. வெள்ளை நிறக் கருவிழிகளைக் கொண்டுள்ளன | போர்னியோ |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "When Javan Green Magpies feel blue – Silent Forest". www.silentforest.eu. Retrieved 2023-04-03.
- ↑ Friedrich Boie (1826). "Generalübersicht der ornithologischen Ordnungen, Familien und Gattungen" (in de). Isis von Oken 19: Cols 969–981 [975 Fn. 2]. https://biodiversitylibrary.org/page/27511179.
- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2019). "Crows, mudnesters, birds-of-paradise". World Bird List Version 9.2. International Ornithologists' Union. Retrieved 25 August 2019.