சிங்-தாங் கோம்பா
| சிங்-தாங் கோம்பா | |
|---|---|
| மணிபூரின் அரசன் | |
| ஆட்சிக்காலம் | 1759–1762, 1763–1798 |
| முடிசூட்டுதல் | 1759 |
| முன்னையவர் | மாரம்பா |
| பின்னையவர் | இலபீன்யச்சந்திரன் |
| பிறப்பு | 13 பொய்னு 1748 ஜன்மஸ்தான் மொய்ராங்கோம், இம்பால் |
| இறப்பு | 1798 முர்சிதாபாத், மேற்கு வங்காளம் |
| துணைவர் | அக்காம் சானு பானுமதி |
| குழந்தைகளின் பெயர்கள் | இலபீன்யச்சந்திரன் மதுசந்திர சிங் குரங்கணயானி சௌரிஜித் சிங் மார்ஜித் சிங் சிங்க்லென் நாங்திரங் கோம்பா |
| மரபு | கார்த்தா அரண்மனை |
| அரசமரபு | நிங்தௌஜா வம்சம் |
| தந்தை | சாம்ஜி கௌரை-லாக்பா |
| தாய் | வாகென்பாம் சானு சக்கா லாய்கோம்பி |
| மதம் | இந்து சமயம் |
| தொழில் | இராஜரிசி – இராஜா-ரிஷி (துறவி) |
நிங்தௌ சிங்-தாங் கோம்பா (Ningthou Ching-Thang Khomba) (1748-1799) இராஜரிசி பாக்ய சந்திரன், ஜெய் சிங் மகாராஜா எனவும் அறியப்படும் இவர் கிபி 18 ஆம் நூற்றாண்டின் மெய்தெய் மன்னர் ஆவார். மணிப்புரி இராசலீலை நடனத்தை கண்டுபிடித்ததற்காக இவர் அறியப்படுகிறார். இவரின் மகள் (ஷிஜா லையோய்பி) இராசலீலையில் இராதையாக நடித்து மணிப்பூரில் பிரபலமான நபராக ஆனார்.[1] இவரது தாத்தா பம்ஹைபா இந்து மதத்தை அதிகாரப்பூர்வ மதமாக மாற்றிய பின்னர மணிப்பூர் மாநிலத்தில் வைணவ சமயத்தைப் பரப்பிய பெருமையும் இவருக்கு உண்டு.[2] இவரது வரலாற்றின் பெரும்பகுதி ஒரு கதையாகவே எழுதப்பட்டுள்ளது.
ஆரம்ப ஆண்டுகள்
[தொகு]இவரது தாத்தா பம்ஹைபா மற்றும் இவரின் தந்தை சம்ஜாய் குராய்-லக்பா ஆகியோர் இவரது மாமா சிட்சாயியால் கொல்லப்பட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாக்ய சந்திரன் 1759 ஆம் ஆண்டில் மணிப்பூரின் அரியணை ஏறினார்.[3] 1762இல் மணிப்பூர் சிட்சாயின் உதவியால் பர்மியர்களால் தாக்கப்பட்டது. பாக்யசந்திரன், தனது ராணி மற்றும் ஒரு சில விசுவாசமான உதவியாளர்களுடன், அகோமுக்கு (நவீனகால அசாம்) தப்பி ஓடினார். அங்கு அகோம் ஆட்சியாளரான இராசேசுவர் சிங்காவின் பாதுகாப்பில் வாழ்ந்தனர்.
அசாமில் வாழ்க்கை
[தொகு]தனது அரசவையில் தஞ்சம் புகுந்த நபர் உண்மையான பாக்ய சந்திரன் அல்ல என்று கூறி, இராசேசுவர் சிங்காவுக்கு ஒரு கடிதம் எழுதிய சிட்சாய், பாக்ய சந்திரனை வெளியேற்றுமாறு சிங்காவைக் கேட்டுக்கொண்டார். இந்த கடிதத்தை நம்பிய சிங்கா, பாக்ய சந்திரனை சந்தேகத்துடன் நடத்தத் தொடங்கினார்.[4]
சிங்கா உண்மையான பாக்யசந்திரனை கண்டுபிடிப்பதற்காக ஒரு பொது வெளியில் ஒரு யானையை அடக்குமாறு கட்டளையிட்டார். மெய்தெய் புராணங்களில், உண்மையான பாக்ய சந்திரனுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தனக்கு வைக்கப்பட்ட இச்சோதனையை சமாளிக்க பாக்யசந்திரன், கடவுள் கோவிந்தனிடம் (கிருட்டிணன்) பிரார்த்தனை செய்கிறார். கடவுள் இவரது கனவில் தோன்றி, உருத்திராட்ச மாலையை மாலையை அணிந்து அரங்கிற்குள் நுழையுமாறு அறிவுறுத்தினார். முடிவில், கோவிந்தன் மன்னருக்கு வெற்றியை உறுதி செய்தார்.
மணிப்பூரின் ஒரே மன்னராக பாக்ய சந்திரன் இருப்பார் என்றும் தனது இராச்சியத்தை மீட்டெடுத்த பிறகு, கைனா மலையின் சரிவுகளில் வளரும் ஒரு குறிப்பிட்ட பழைய பலா மரத்திலிருந்து கிருட்டிணனுக்கான மூர்த்தியை நிறுவ வேண்டும் என கனவில் கடவுள் கூறுகிறார்.
தெய்வத்தை நிறுவிய பிறகு, கிருட்டிணனுக்காக இராசலீலை நிகழ்ச்சிக்கு மன்னர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கடவுள் கூறினார். மேலும், இராசலீலையை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்த முழுமையான வெளிப்பாட்டையும் மன்னர் அறிந்து கொண்டார்.
பாக்ய சந்திரன் தனது கனவில் பெற்ற அறிவுறுத்தப்பட்டபடி மாலையை அணிந்து அரங்கிற்குள் நுழைந்தார். அடுத்தடுத்த சண்டையில், யானை பின்வாங்கியது.
ஆட்சி
[தொகு]
1775 ஆம் ஆண்டில் மன்னர் தனது தலைநகரை பிஷ்ணுபூரில் நிறுவி, கைனா மலையில் கோவிந்த மூர்த்தியை செதுக்கினார். ஜனவரி 11,1779 அன்று தனது பிரபலமான இராச லீலை நடன நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் மீண்டும் முடிசூட்டப்பட்டார்.
இவரது ஆட்சியின் போது, மணிப்பூரிலிருந்து பர்மியர்களை விரட்டியடித்தார். மன்னர் கலைகளுக்கும் மதத்திற்கும் பெரும் புரவலராக இருந்தார். மேலும் வைணவ மதம் மெய்தேய் மக்களிடையே பிரதிபலித்தது. மன்னர் சைதன்யரின் பக்தராக இருந்தார். இவரது ஆட்சியின் போது நித்தியானந்தரின் சிலை உருவாக்கப்பட்டது.[5]
1796இல் தனது தலைநகரை காங்லாவுக்கு மாற்றினார். ஒரு வருடம் கழித்து, பிப்ரவரி 5,1798 அன்று, தனது மூத்த மகன் இலபீன்யச்சந்திரனிடம் அரியணை பொறுப்பை அளித்தார்.[6] தனது கடைசி காலத்தில் நவதீப் உட்பட பல்வேறு வைணவ புனிதத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார். மன்னர் பாக்ய சந்திரன் டிசம்பர் 25,1798 அன்று மேற்கு வங்காளத்தின் முர்சிதாபாத்தில் இறந்தார்.[7]
குடும்பம்
[தொகு]சிங்-தாங் கோம்பா சம்ஜாய் குராய்-லக்பாவின் மகன் ஆவார். அவருக்கு அமைச்சர் ஆனந்த ஷாய் மற்றும் சிட்சாய் என்ற இரண்டு சகோதரர்கள் இருந்தனர். சிங்-தாங்கிற்கு பல உடன்பிறப்புகள் இருந்தனர். அவர்களில் மிகவும் பிரபலமானவர் மணிப்பூரின் மன்னர் கௌரிசியாம் 1763 இல் இறக்கும் வரை மன்னராக இருந்தார்.
கலாச்சார படைப்புகள்
[தொகு]மணிப்பூரில் நிகழ்த்தப்படும் இராசலீலையின் பாரம்பரியம் சிங்-தாங்கோம்பாவால் முன்னெடுக்கப்பட்டது. முதல் மணிப்பூர் மகா இராசாலீலை 1777 இல் நிகழ்த்தப்பட்டது.
இவரது ஆட்சியிக்காலத்தில் வங்காள மத போதகர்களின் செல்வாக்கின் கீழ், மணிப்பூரில் சங்கீத கீர்த்தனை பாரம்பரியமும் தொடங்கியது.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sheram, AK (2012). "Manipuri, The". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). வங்காளதேசத்தின் ஆசியச் சமூகம்.
- ↑ "Manipur". Archived from the original on 10 August 2009. Retrieved 11 November 2016.
- ↑ "History of Manipur – The Medieval Period". இந்திய தொழில்நுட்பக் கழகம் குவகாத்தி. Archived from the original on 5 June 2011. Retrieved 11 November 2016.
- ↑ Swami, Jayadwait. "Manipur – A Land of Krishna Conscious Culture". Archived from the original on 4 October 2007. Retrieved 11 November 2016.
- ↑ Singh, Kunj Bihari (2004). "Manipur Vaishnavism: A Sociological Interpretation". In Rowena Robinson (ed.). Sociology of Religion in India. Themes in Indian Sociology, 3. New Delhi: Sage Publ. India. pp. 125–132. ISBN 0-7619-9781-4. p. 128.
- ↑ Sana, Rajkumar Somorjit (2010). The Chronology of Meetei Monarchs ( From 1666 to 1850 CE). Imphal: Waikhom Ananda Meetei. p. 188. ISBN 978-81-8465-210-9.
- ↑ Sana, Rajkumar Somorjit (2010). The Chronology of Meetei Monarchs (From 1666 to 1850 CE). Imphal: Waikhom Ananda Meetei. p. 189. ISBN 978-81-8465-210-9.
- ↑ "Information – Snippets – narthaki.com". Archived from the original on 11 October 2008. Retrieved 11 November 2016.