உள்ளடக்கத்துக்குச் செல்

சிங்கோரி வனவிலங்கு சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கோரி வனவிலங்கு சரணாலயம்
Singhori Wildlife Sanctuary
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
Map showing the location of சிங்கோரி வனவிலங்கு சரணாலயம் Singhori Wildlife Sanctuary
Map showing the location of சிங்கோரி வனவிலங்கு சரணாலயம் Singhori Wildlife Sanctuary
Map showing the location of சிங்கோரி வனவிலங்கு சரணாலயம் Singhori Wildlife Sanctuary
Map showing the location of சிங்கோரி வனவிலங்கு சரணாலயம் Singhori Wildlife Sanctuary
அமைவிடம்ராய்சேன் மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா
பரப்பளவு287.91 சதுரகிலோமீட்டர்
நிறுவப்பட்டது1976

சிங்கோரி வனவிலங்கு சரணாலயம் (Singhori Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இராய்சேன் மாவட்டத்தின் பாரி தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். 1976 ஆம் ஆண்டு சூலை மாதம் 2 ஆம் தேதியன்று ஓர் வனவிலங்கு சரணாலயமாக இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இரதபாணி புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாக சிங்கோரி வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இரண்டு முக்கிய பருவகால ஆறுகளான கோகாராவும் பர்னாவும் சரணாலயத்தின் வழியாகப் பாய்கின்றன. சரணாலயத்தின் விலங்கினங்களில் வங்காளப் புலி, இந்திய சிறுத்தை, சிட்டல், சம்பார், காட்டுப்பன்றி போன்ற பாலூட்டிகள் இங்கு வாழ்கின்றன. சரணாலயத்தில் உள்ள காடுகள் வெப்பமண்டல வறண்ட இலையுதிர் காடுகள் ஆகும்.[1][2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "tripuntold". www.tripuntold.com. Retrieved 2025-11-25.
  2. "Singhori Wildlife Sanctuary - WildTrails | The One-Stop Destination for all your Wildlife Holidays". wildtrails.in (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2017-09-23. Retrieved 2025-11-25.
  3. "Singhori Wildlife Sanctuary". Learn UPSC. Retrieved 2025-11-25.
  4. "Avian diversity of Singhori Wildlife Sanctuary, Raisen District, Madhya Pradesh" (PDF). www.researchtrend.net.