சிங்கோகுரோமைட்டு
Appearance
சிங்கோகுரோமைட்டுZincochromite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சிபைனல் குழு |
வேதி வாய்பாடு | ZnCr2O4 |
இனங்காணல் | |
நிறம் | பழுப்பு கலந்த கருப்பு |
படிக இயல்பு | அறுகோணத்துடன் வடிவுள்ள படிகங்கள் |
படிக அமைப்பு | கனசதுரப் படிகம் |
மோவின் அளவுகோல் வலிமை | 5.8 |
மிளிர்வு | அரை உலோகம் |
கீற்றுவண்ணம் | பழுப்பு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது, மெல்லிய வெள்லியில் ஒளிகசியும் |
ஒளியியல் பண்புகள் | சமதிருப்பம் |
பிற சிறப்பியல்புகள் | பலவீனமான இணைகாந்தம் |
மேற்கோள்கள் | [1][2][3][4] |
சிங்கோகுரோமைட்டு (Zincochromite) என்பது ZnCr2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். துத்தநாக குரோமியம் ஆக்சைடு கனிமமாக இது கருதப்படுகிறது. துத்தநாகத்தை ஒத்த குரோமைட்டு கனிமம் என்பதால் இப்பெயர் பெற்றுள்ளது. 1987 ஆம் ஆண்டு முதன்முதலாக உருசியாவின் ஒனேகா ஏரிக்கு அருகில் அமைந்திருந்த யுரேனியப் படிவுகளில் இக்கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது [3]. ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சு மாநிலத்திலுள்ள தோலோ மலையிலும், கானா நாட்டின் அசான்டி தங்கப் பட்டைப் பிரதேசத்திலுள்ள டார்க்வா சுரங்கத்திலும் சிங்கோகுரோமைட்டு காணப்படுகிறது [1]