சிங்கூர் நிலச்சர்ச்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் ஹூக்லி மாவட்டம், சிங்கூர் நகரத்தில் சிறப்பு பொருளாதார மண்டலதை உருவாக்கி அதில் டாடா நானோ கார் தொழிற்சாலை அமைப்பதற்கு[1] [2] 2006-ஆம் ஆண்டில் 997 ஏக்கர் வேளாண்மை விளைநிலங்களை புத்ததேவ் பட்டாசார்யா தலைமையிலான மேற்கு வங்காள அரசு கையகப்படுத்தியது. விளைநிலங்களை பொதுமக்களிடமிருந்து கட்டாயப்படுத்தி கையகப்படுத்தியதை எதிர்த்து மம்தா பானர்ஜி தலைமையிலான அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியின் தலைமையிலான மேற்கு வங்க அரசை எதிரித்து பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.[3] [4][5] [6]

இதனால் 3 அக்டோபர் 2008 அன்று டாடா நானோ கார் நிறுவனம், சிங்கூர் நகரத்தில் சிறு கார் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டதாக அறிவித்தது.[7] கார் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை டாடா நானோ நிறுவனம் கைவிட்டதால், அரசு கையகப்படுத்திய விளைநிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கக் கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இறுதியாக 30 ஆகஸ்டு 2016 அன்று இந்திய உச்ச நீதிமன்றம், சிங்கூரில் கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களை, மேற்கு வங்காள அரசு மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.[8]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]