சிங்குலிப்சுகோம்பைட்டு
| சிங்குலிப்சுகோம்பைட்டு Zinclipscombite | |
|---|---|
சிங்குலிப்சுகோம்பைட்டு கனிமத்தின் வெளிர் பச்சை நிற உருண்டைகள் மற்றும் படிகக் கொத்துகள். அமெரிக்காவில் கிடைத்தது. | |
| பொதுவானாவை | |
| வகை | பாசுப்பேட்டு கனிமம் |
| வேதி வாய்பாடு | Zn(Fe3+)2(PO4)2(OH)2 |
| இனங்காணல் | |
| மோலார் நிறை | 386.04 g/mol |
| நிறம் | அடர் பச்சை நிறம் முதல் பழுப்பு நிறம் வரை |
| படிக அமைப்பு | நாற்கோணம் |
| பிளப்பு | இல்லை |
| முறிவு | நொறுங்கும் |
| மோவின் அளவுகோல் வலிமை | 5 |
| மிளிர்வு | பளபளக்கும் |
| கீற்றுவண்ணம் | அடர் பச்சை நிறம் முதல் பழுப்பு நிறம் வரை |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
| ஒப்படர்த்தி | 3.65 |
| ஒளியியல் பண்புகள் | ஓரச்சு |
| ஒளிவிலகல் எண் | nω = 1.755, nε = 1.795 |
| இரட்டை ஒளிவிலகல் | 0.0400 |
| மேற்கோள்கள் | [1][2] |
சிங்குலிப்சுகோம்பைட்டு (Zinclipscombite) என்பது Zn(Fe3+)2(PO4)2(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்..[1][2] அடர் பச்சை நிறம் முதல் பழுப்பு நிறம் வரையிலான நிறங்களில் காணப்படுகிறது. துத்தநாக-இரும்பு பாசுப்பேட்டு கனிமமாக வகைப்படுத்தப்படுகிறது. சிங்குலிப்சுகோம்பைட்டு இழைபோன்ற கோளங்களாகக் காணப்படுகிறது. நாற்கோணப் படிக அமைப்பைக் கொண்டுள்ளது.[1]
சிலிக்கேட்டு அல்லாத கனிமங்களின் வகைப்பாட்டில், சிங்குலிப்சுகோம்பைட்டு கனிமமானது இலிப்சுகோம்பைட்டு குழுவில் இடம்பெறுகிறது; இக்குழுவில் இலிப்சுகோம்பைட்டு கனிமமும் அடங்கும்.
பன்னாட்டு கனிமவியல் சங்கம்சிங்குலிப்சுகோம்பைட்டு கனிமத்தை Zlcb[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
கண்டுபிடிப்பு
[தொகு]சிங்குலிப்சுகோம்பைட்டு கனிமம், அமெரிக்காவின் நெவாடா மாநிலம், அம்போல்ட்டு மாகாணம், வால்மி, எட்னா மலைப் பகுதியில் அமைந்துள்ள சில்வர் காயின் சுரங்கத்திலிருந்து பெறப்பட்ட ஒரு மாதிரியிலிருந்து, சுகனோவ், பெகோவ், மோக்கல், சடோவ் மற்றும் துபின்சுக்கு ஆகியோரால் கண்டறியப்பட்டு பெயரிடப்பட்டது.[4][5] இந்தப் புதிய கனிமத்தின் பெயர், 2006-ஆம் ஆண்டில், 'பன்னாட்டு கனிமவியல் சங்கத்தின் புதிய கனிமங்கள் மற்றும் கனிமப் பெயர்களுக்கான ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 Mindat
- 1 2 WebMineral
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ Chukanov, N. V., Pekov, I. V., Möckel, S., Zadov, A. E., and Dubinchuk V. T. Zinclipscombite, Zn(Fe3+)2(PO4)2(OH)2, a new mineral species Geology of Ore Deposits, 49, 7, 509–513, எஆசு:10.1134/S1075701507070033
- ↑ Chukanov, N. V., Pekov, I. V., Möckel, S., Zadov, A. E., and Dubinchuk V. T. (2006): Zinclipscombite Zn(Fe3+)2(PO4)2(OH)2 – a new mineral. Proceedings of the Russian Mineralogical Society, 135(6), 13–18.
வெளி இணைப்புகள்
[தொகு]- Gallery of zinclipscombite pictures at mindat.org.