உள்ளடக்கத்துக்குச் செல்

சிங்கி இறால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Palinuridae|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
சிங்கி இறால்
புதைப்படிவ காலம்:110–0 Ma
Panulirus interruptus
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Palinuridae

சிங்கி இறால் (Spiny lobster) என்பது ஒரு உயிரியல் குடும்பம் ஆகும். இவை ஓடுடைய கணுக்காலியும், பத்துக்காலியும் ஆகும்.[1] சிங்கி இறால்களில் 60 வகைகள் உள்ளன.

விளக்கம்

[தொகு]
ஜாசஸ் எட்வர்ட்ஸி

சிங்கி இறால்களில் உடலில் காணப்படும் கடினமான மேலோடு மற்றும் புறவன்கூடு ஆகியவற்றின் அடிப்படையில் அவை மேலோட்டமாக கல் இறால்களை ஒத்திருந்தாலும், இரண்டு குழுக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இல்லை. சிங்கி இறால்களின் உடல் 19 பாகங்களாக ஆனது. அந்த பாகங்கள் கனத்த ஓடால் மூடப்பட்டு இருக்கின்றன. அந்த ஒவ்வொரு பாகங்களும் இணையும் இடதில் மெல்லிய தோல் இருக்கிறது. அதனால் சிங்கி இறால்களால் எளிதாக வளையவும், நெளியவும் முடியும். இவை வளர வளர தங்கள் புறவன் கூட்டை அடிக்கடி கழற்றக்கூடியன. சிங்கி இறால்களின் முதன்மை அடையாளமாக அதன் நீண்ட இரு உணர் கொம்புகள் ஆகும். சாட்டை போன்ற இந்த உணர் கொம்புகளை இவை ஆயுதமாகவும் பயன்படுத்துகின்றன. இது தவிர இரு சிறு உணர் கொம்புகளையும் இவை கொண்டுள்ளன. இவற்றின் உடல் முழுவதும் முன்னோக்கிய முட்கள் காணப்படும். சிங்கி இறால்கள் பின்னோக்கியும் நீந்தக் கூடியன.

பெண் சிங்கி இறால்கள் அதன் வாலில் குண்டூசி தலை அளவுள்ள பல ஆயிரக்கணக்கான முட்டைகளை சுமந்திருக்கும். இதனால் இதன் வால் ஆண் இறாலை விட பெரியதாகவும், பிரகாசமாகவும் இருக்கும். கடலில் தகுந்த வெதுவெதுப்பு ஏற்படும் வரை இவை முட்டைகளை பொரிக்கச் செய்யாது. முட்டைகள் பொறித்ததும் அதில் இருந்து குடம்பி வடிவ புழுக்கள் வெளிவரும். அவை நன்கு முதல் ஆறு வரங்களுக்கு கடலின் மேற்பரப்பில் மிதக்கும். இதில் பெரும் பகுதி பிற உயிரினங்களுக்கு இரையாகி மிகமிகச் சிலவே தப்பிப்பிழைத்து கடலில் அமிழ்ந்து சிங்கி இறால்களாக உருவாகும்.

புதைபடிவ பதிவு

[தொகு]

மெக்சிக்கோவின் சியாபாஸில் எல் எஸ்பிகல் அருகே 110 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவத்தை 1995 இல் கண்டுபிடித்ததன் மூலம் சிங்கி இறால்களின் பழமையான தொல்லுயிர் எச்சம் கிடைத்துள்ளது. மெக்சிகோவின் தேசிய தன்னாட்சிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த புதைபடிவத்திற்கு பாலினுரஸ் பாலேகோசி என்று பெயரிட்டுள்ளனர். மேலும் இது தற்போது ஆப்பிரிக்காவின் கரையோரத்தில் வாழும் பாலினுரஸ் இனத்துக்கு மிக நெருக்கமானதாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.[2]

சூழலியல்

[தொகு]
வெனிசுலாவில் பானுலிரஸ் ஆர்கசுக்கு மீன்பிடித்தல்

கரிபியன் மற்றும் நடுநிலக் கடல் உட்பட அனைத்து வெப்பமயமான கடல்களிலும் சிங்கி இறால்கள் காணப்படுகின்றன. இவை ஆத்திரேலிய கடல் பகுதிகளிலும் பொதுவாக காணப்படுகின்றன.[3]

சிங்கி இறால்கள் பாறைகள் மற்றும் பவளப் பாறை இடுக்குகளில் வாழ முனைகின்றன. இரவாடிகளான இவை எப்போதாவது இரவில் வெளியே வந்து கடல் நத்தைகள்,[4] நண்டுகள், அல்லது கடல் முள்ளெலி, மீன், மட்டி, சிப்பி, மூறை போன்ற உரினங்களை பிடித்து சாப்பிடுகிறது. இவை தங்கள் சிறிய உணர் கொம்புகள் மூலம் கடலின் ஏற்படும் வேதியல் மாற்றங்கள் போன்றவற்றை உணர்கின்றன. இவை வெப்பப் பகுதி நீரில் வாழக்கூடியன. வெப்பம் அதிகரிக்கும்போது இவை கரையை நோக்கிவரும். குளிர் மிகுந்தால் ஆழ்கடல் நோக்கி நகரும். கடலில் குளிரும் கொந்தளிப்பும் மிகுந்தால் இவை ஒன்றன் பின் ஒன்றாக ஆழ்கடல் நோக்கி வரிசையாக ஊர்வலமாக செல்லத் துவங்கும். இந்த ஊர்வலம் 50 இரால் நீளத்திற்கு மேல் இருக்கலாம். பார்வை குறைபாடு உள்ள சிங்கி இறால்கள் கடலின் வெவ்வேறு பகுதிகளில் மாறும் தண்ணீரில் உள்ள இயற்கை பொருட்களின் வாசனை மற்றும் சுவையைக் உணர்ந்து செல்கின்றன. புவியின் காந்தப்புலத்தைக் கண்டறிந்து அதன் மூலம் சிங்கி இறால்கள் செல்ல முடியும் என்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவை தங்கள் நீண்ட உணர் கொம்பைப் பயன்படுத்தி, பிறருடன் தொடர்பு கொள்கின்றன. எதிரி விலங்குகள் இதனிடம் நெருங்கினால் தன் நீண்ட உணர்கொம்பை தன் உடலில் தேய்த்து கீச்சிடும் ஒலியை எழுப்பி அதன் மூலம் எதிரியை பயமுறுத்தி தன்னைக் காத்துக் கொள்கிறது. சிங்கி இறால்கள் பொதுவாக ஒன்றாக இருக்கும் சமூக பழக்கத்தை கொண்டுள்ளன. இருப்பினும் அண்மைய ஆய்வுகள் ஆரோக்கியமான சிங்கி இறால்கள் நோயுற்றவைகளிடமிருந்து விலகி, நோயிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் என்று குறிப்பிடப்படுகிறது.[5]

கல் இறால் போல, சிங்கி இறால்களும் உண்ணத்தக்கவை. மேலும் பொருளாதார ரீதியாக குறிப்பிடத்தக்க உணவாக உள்ளது. பகாமாசின் மிகப்பெரிய உணவு ஏற்றுமதியாக இவை உள்ளன.[6]

குறிப்புகள்

[தொகு]
  1. Harold W. Sims Jr. (1965). "Let's call the spiny lobster "spiny lobster"". Crustaceana 8 (1): 109–110. doi:10.1163/156854065X00613. 
  2. Victoria Jaggard (May 3, 2007). "Photo in the news: oldest lobster fossil found in Mexico". National Geographic. http://news.nationalgeographic.com/news/2007/05/070503-oldest-lobster.html. 
  3. Sue Wesson (2005). "Murni Dhungang Jirrar Living in the Illawarra - Aboriginal people and wild resource use" (PDF). Department of Environment, Climate Change and Water. p. 22.
  4. Derby, Charles D.; Kicklighter, Cynthia E.; Johnson, P. M.; Xu Zhang (29 March 2007). "Chemical Composition of Inks of Diverse Marine Molluscs Suggests Convergent Chemical Defenses". Journal of Chemical Ecology 2007 (33): 1105–1113. doi:10.1007/s10886-007-9279-0. பப்மெட்:17393278. http://www2.gsu.edu/~biocdd/Publications/Reprints/2007/Derby%2520et%2520al%2520joun%2520chem%2520eco%25202007.pdf+&cd=3&hl=mr&ct=clnk&gl=in. பார்த்த நாள்: 9 May 2015. 
  5. "Lobsters have innate way to stay healthy, ODU researchers say in Nature article". Old Dominion University News. May 24, 2006. Archived from the original on September 10, 2006. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 27, 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help); Unknown parameter |= ignored (help)
  6. "The 'spiny' focus of fisheries". InternationalReports.net. 2003. Archived from the original on November 21, 2008.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கி_இறால்&oldid=3929793" இலிருந்து மீள்விக்கப்பட்டது