உள்ளடக்கத்துக்குச் செல்

சிங்காரவேலர் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்காரவேலர் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2018 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழில் அறிவியல் கருத்துக்களை நூலாக எழுதுபவர்களிலும், சமுதாய முன்னேற்றத்திற்காகவும், சமத்துவ கொள்கைக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் போராடுபவர்களிலும் சிறந்த ஒருவருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. விருது பெறுபவர்களுக்கு (இதற்கு முன் ஒரு இலட்சம் ரூபாயாக இருந்தது) இரண்டு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்படுகின்றனர்.

விருது பெற்றவர்கள் பட்டியல்

[தொகு]
வரிசை எண் விருது பெற்றவர் பெயர் விருது வழங்கப்பட்ட ஆண்டு
1பா. வீரமணி[1]2018
2அசோகா சுப்பிரமணியன் (எ) சோ. கா. சுப்ரமணியன்2019
3ஆ. அழகேசன்[2]2020
4மதுக்கூர் இராமலிங்கம்[3]2021
5நா. சு. சிதம்பரம்[4]2022
6மு. சுப்பிரமணி[5][6][7]2023

சிறப்புப் பயண அட்டை

[தொகு]

விருதாளர்கள் அனைவருக்கும், அனைத்துத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளிலும் (குளிரூட்டப்பட்டப் பேருந்துகள் தவிர) வாழ்நாள் முழுவதும் கட்டணமின்றி பயணிப்பதற்கான சிறப்புப் பயண அட்டை வழங்கப்படுகிறது. [8]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி உள்ளிட்ட 56 பேர் தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுக்கு தேர்வு: முதல்வர் பழனிசாமி சென்னையில் இன்று வழங்குகிறார்". Hindu Tamil Thisai. Retrieved 2021-03-04.
  2. "திருவள்ளுவர் விருது, சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு". Dinamalar. 2021-01-13. Retrieved 2021-03-04.
  3. "மதுக்கூர் ராமலிங்கத்திற்கு சிங்காரவேலர் விருது அறிவிப்பு". தீக்கதிர். 2022-01-26. Retrieved 2022-03-20.
  4. "தமிழறிஞர்களுக்கு 2022ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கல்". தினமலர். 2024-02-23. Retrieved 2025-01-08.
  5. "தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு . மு.பெ.சாமிநாதன் அவர்கள் துறையின் சார்பாக பல்வேறு விருதுகளை வழங்கினார்". தமிழ் வளர்ச்சித்துறை செய்திகள். 2025-01-08. Retrieved 2025-01-08.
  6. "26 பேருக்கு தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்: அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார்". தினமணி. 2025-01-08. Retrieved 2025-01-08.
  7. "பர்வீன் சுல்தானா உள்ளிட்ட 26 பேருக்கு விருதுகள்: அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்". மக்கள்குரல். 2025-01-08. Retrieved 2025-01-08.
  8. தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்காரவேலர்_விருது&oldid=4626841" இலிருந்து மீள்விக்கப்பட்டது