சிங்காநல்லூர் நகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாட்டில் கோவை மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள ஓர் நகராட்சி ஆகும்.இது கோயம்புத்தூர் மாநகராட்சி யுடன் உள்ள பகுதியாகும்

மக்கள் தொகை[தொகு]

இந்திய மக்கள் தொகை 2011 கணக்கெடுப்பு படி சிங்காநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மொத்தம் 3,24,107 பேர் வசிக்கின்றனர். இவற்றுள் 51% பெண்களும் 49% ஆண்களுகம் வசிக்கின்றனர்.

போக்குவரத்து[தொகு]

கோவை பெருநகர மாநகராட்சியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் நகராட்சி சிங்காநல்லூர் ஆகும். இங்குள்ள நான்குரோடு சந்திப்பு மிகவும் முக்கியமான சாலைகளை இணைப்பதால் மிக மிக போக்குவரத்து நெரிசல் அதிகம். மேலும் புறநகர் பேருந்து நிலையமும் இங்குதான் அமைந்துள்ளது.கோயம்புத்தூர் மாநகராட்சியில் அமைந்துள்ள பத்து பேருந்து நிலையங்களுள் இது முக்கிய பேருந்து நிலையம் ஆகும்.சமீபத்தில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க இரட்டை வழி பாதை கொண்ட மேம்பாலம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அறிவித்தார்.அதன்படி மேம்பால தூண் அமைக்கும் பணிக்கு மண் பரிசோதனை செய்யப்பட்டு பணிகள் விரைவாக நடந்து வருகிறது.மேலும் ராமநாதபுரம் முதல் அரசு மருத்துவமனை வரை மேம்பாலம் பணிகள் மிகவும் விரைவாக நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது

உழவர் சந்தை[தொகு]

சிங்காநல்லூர் நகராட்சியில் உழவர் சந்தை திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதி அவர்களின் ஆட்சியில் தொடங்கப்பட்டது. மாநகரின் அருகிலுள்ள கிராமங்களில் விளையும் காய்கறி, பழங்கள். ஆகியவைகளை விற்பனை செய்ய இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.பிறகு இதனை அரசின் வேளாண்மை துறையுடன் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இணைத்தார். இதனால் விவசாயிகள் வாழ்வில் ஒரு மாபெரும் புரட்சியை செல்வி ஜெயலலிதா கொண்டுவந்தார்.

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி[தொகு]

சிங்காநல்லூர் நகராட்சி[தொகு]