உள்ளடக்கத்துக்குச் செல்

சிங்கள பௌத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பௌத்த சமயம் என்பது கிமு 566-486 ஆம் காலப்பகுதிகளில் வாழ்ந்த சித்தார்த்த கௌதமர் என்பவரின் உயரிய தத்துவமாகும். இவர் உலக வாழ்வியல் இன்பங்களைத் வெறுத்து "நிலையாமை" குறித்த பட்டறிவுடன் பற்றுகளை நீக்கி துறவறம் பூண்டு புத்த (ஞானம்) நிலையடைந்ததாகக் கூறப்படுகின்றது. இதனால் இவர் கௌதம புத்தர் என்று அழைக்கப்படுகின்றார்.

இவரது தத்துவங்கள் மிகவும் உயரிய கோட்பாடுகளைக் கொண்டதாகும். இதனை சமயம் என்று கூறுவதை விட தத்துவப் போதனைகள் என்று கூறுவதே மிகவும் பொருத்தமானதாகும். இத் தத்துவப் போதனைகள் இவரது சீடர்களால் பரப்பப்பட்டது. இவை காலப்போக்கில் ஒரு சமயமாகவும் உருவெடுத்தது. இந்தியாவில் தோன்றிய இம்மதம் இன்றைய பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உற்பட மத்திய ஆசிய நாடுகளில் பரவிய இம் மதம் திபெத், சீனா, ஹொங்கொங், ரசியா, மொங்கோலியா, தாய்லாந்து, கம்போடியா, மியான்மார், லாவோஸ், வியட்நாம், யப்பான், கொரியா என பல ஆசிய நாடுகளிற்கும் பரவியது. அவ்வாறே இலங்கை தீவுக்கும் பரவியது.

இலங்கையில் பௌத்தம்[தொகு]

இலங்கையின் வரலாற்று ஆவணமாகக் கருதப்படும் மகாவம்சம் நூலில் கி.மு.3 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மகிந்தனால் இலங்கையில் பௌத்தம் அறிமுகம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அக் காலப்பகுதியில் இலங்கையின் அனுராதப்புரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சிப் புரிந்துகொண்டிருந்த அரசனின் பெயர் தேவநம்பியதீசன். என்றும் அவன் புத்த மதத்தை தழுவியதுடன், இலங்கையிலும் புத்த மதம் பரவ வழிவகை செய்தான் என்றும் கூறப்படுகின்து.


மேற்கோள்கள்[தொகு]


வெளியினைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கள_பௌத்தம்&oldid=3899740" இலிருந்து மீள்விக்கப்பட்டது