சிங்கலிலா முகடு

ஆள்கூறுகள்: 27°14′39″N 88°02′29″E / 27.2443°N 88.0414°E / 27.2443; 88.0414
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கலிலா முகடு
Singalila Ridge
உயர்ந்த இடம்
உயரம்3636
Parent peakசண்டக்பு
ஆள்கூறு
புவியியல்
தூங்கும் அழகு மலை is located in இந்தியா
தூங்கும் அழகு மலை
தூங்கும் அழகு மலை
இந்திய நிலப்படம்
அமைவிடம்டார்ஜிலிங் மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா
நிலவியல்
மலையின் வகைமலை முகடு

சிங்காலிலா முகடு (Singalila Ridge) என்பது வடமேற்கு மேற்கு வங்காளத்திலிருந்து இமயமலையின் இந்தியப் பகுதியில் சிக்கிம் வழியாகச் செல்லும் வடக்கு-தெற்கு மலை முகடு ஆகும். நேபாளத்தில் உள்ள இலாம் மாவட்டம் இந்த மலைத்தொடரின் மேற்குப் பகுதியில் உள்ளது.

மேற்கு வங்காளத்தின் மலைத்தொடர்களின் மேற்கில் உள்ள மற்ற இமயமலைத் தொடர்களிலிருந்து இந்த மலைமுகடு பிரிக்கிறது. மேற்கு வங்காளத்தின் இரண்டு உயரமான சிகரங்கள், சண்டக்பு (3,636 m (11,929 அடி)[1] மற்றும் பலுட் ( 3,600 m (11,800 அடி) இந்த முகட்டில் அமைந்துள்ளது. சிங்காலிலா தேசிய பூங்கா இந்த மலைமுகட்டைச் சூழ்ந்துள்ளது. இது கஞ்சன்சங்கா மற்றும் எவரெசுட் சிகரத்தின் காட்சிகளுக்காகக் குறிப்பிடத்தக்கது. மானேபஞ்சனிலிருருந்து சந்தக்பூ மற்றும் பலுட் வரையிலான மலையேற்றம் சாகசப் பயணிகளிடையே பிரபலமானது. மலைப்பகுதியில் இருசக்கர வாகனப் பயணத்திற்கும் சிறந்தப்பகுதி இதுவாகும்.[2]

மலைச்சிகரங்கள்[தொகு]

இப்பகுதியில் உள்ள நான்கு உயரமான சிகரங்கள் :

  • பலூட் 3,600 m (11,800 அடி)
  • சண்டக்பு 3,636 m (11,929 அடி) - மேற்கு வங்கத்தின் மிக உயரமான இடம்
  • டோங்லு 3,036 m (9,961 அடி)
  • சபர்கிராம் 3,543 m (11,624 அடி)

திரைப்படம்[தொகு]

இப்பகுதியில் எடுக்கப்பட்டத் திரைப்படம்

  • சிங்காலிலா இன் தி இமாலயா (இமயமலையில் சிங்களிலா)

மேற்கோள்கள்[தொகு]

  1. Sandakphu Top – Wikimapia
  2. "Singalila Ridge Mountain Biking Tour | Alienadv.com". www.alienadv.com. பார்க்கப்பட்ட நாள் 2016-04-25.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கலிலா_முகடு&oldid=3641880" இலிருந்து மீள்விக்கப்பட்டது