உள்ளடக்கத்துக்குச் செல்

சிங்கரேணி நிலக்கரிச் சுரங்க நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கரேணி நிலக்கரிச் சுரங்க நிறுவனம்
வகைஅரசு பொதுத்துறை நிறுவனம்
நிறுவுகை23 அக்டோபர் 1920
தலைமையகம்கொத்தகூடம், பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம் & ராமகுண்டம், கரீம்நகர் மாவட்டம், தெலங்கானா
சேவை வழங்கும் பகுதி350 சதுர கிலோ மீட்டர், கோதாவரி சமவெளியின் 6 மாவட்டங்கள்
முதன்மை நபர்கள்தலைவர் & மேலாண்மை இயக்குநர், இந்திய ஆட்சிப் பணி
உற்பத்திகள்நிலக்கரி எடுத்தல் & மின் உற்பத்தி
உரிமையாளர்கள்தெலங்கானா மாநில அரசு மற்றும் இந்திய அரசு
பணியாளர்43,895 (2020)
இணையத்தளம்scclmines.com

சிங்கரேணி நிலக்கரிச் சுரங்க நிறுவனம் (The Singareni Collieries Company Limited or SCCL) இந்தியாவின் தெலங்கானா மாநில அரசிற்கு சொந்தமான அரசு நிறுவனம் ஆகும். இந்த நிலக்கரி நிறுவனத்தின் 49% பங்குகள் இந்திய அரசின் நிலக்கரி அமைச்சகம் வைத்துள்ளது. இந்நிறுவனம் கோதாவரி சமவெளியில் உள்ள ஆறு மாவட்டங்களில் 45 நிலக்கரி சுரங்கங்கள் கொண்டுள்ளது. அதில் 25 திறந்தவெளி சுரங்கங்களும்; 25 நிலத்தடி சுரங்கங்களும் உள்ளது. இந்நிறுவனத்தில் 45,079 தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளும் பணியாற்றுகிறார்கள். இந்நிறுவனம் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தியில் 9.2% பங்களிக்கிறது. 1889ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட இந்நிறுவனம் இதுவரை 1.36 பில்லியன் டன் நிலக்கரி எடுத்துள்ளது. மேலும் இதன் நிலக்கரி இருப்பு 10.84 பில்லியன் டன்னாக உள்ளது.

வரலாறு

[தொகு]

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் 1889ஆம் ஆண்டில் சிங்கரேணி நிலக்கரிச் சுரங்க நிறுவனம் நிறுவப்பட்டது. 23 டிசம்பர் 1920 அன்று இதனை ஐதராபாத் தக்கான நிலக்கரி நிறுவனம் வாங்கியது. 1945இல் ஐதராபாத் நிஜாம் இந்நிறுவனத்தை வாங்கியது. பின் இந்திய விடுதலைக்குப் பிறகு இந்நிறுவனம் ஆந்திர அரசு நிறுவனமாக செயல்பட்டது. தெலங்கானா மாநிலம் நிறுவப்பட்டப் பிறகு இந்நிறுவனம் தெலங்கானா அரசு நிறுவனமாக மாறியது. 1960 முதல் இந்நிறுவனத்தின் பங்குகள் தெலங்கானா மாநில அரசு மற்றும் இந்திய அரசு 51:49 விகிதத்தில் கொண்டுள்ளது.

மேலாண்மை

[தொகு]

தெலங்கானா மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்நிறுவனம் 10 இயக்குநர்கள் மற்றும் ஒரு மேலாண்மை இயக்குநர் தலைமையில் இயங்குகிறது. தலைவர்-மேலாண்மை இயக்குநரை தெலங்கானா அரசே நியமிக்கிறது. இயக்குநர்கள் அவையின் 3 இயக்குநர்கள் இந்திய அரசாலும்; தலைவர்-மேலாண்மை இயக்குநர் உள்ளிட்ட 3 இயக்குநர்கள் தெலங்கானா மாநில அரசாலும் நியமிக்கப்படுகின்றனர். மேலும் 5 செயல் இயக்குநர்கள் நிறுவனத்தின் அன்றாடப் பணிகளை கவனிப்பர். இந்நிறுவனத்தின் தலைமையிடம் கொத்தகூடத்திலும் மற்றும் தலைவர்-மேலாண்மை இயக்குநர் அலுவலகம் ஐதராபாத்திலும் உள்ளது.[1]

செயல்பாடுகள்

[தொகு]

சிங்கரேணி நிலக்கரி நிறுவனம் நிலக்கரி தோண்டி எடுப்பதுடன், நிலக்கரியைக் கொண்டு சிங்கரேணி, கொத்தகூடம், மற்றும் ராமகுண்டம் ஆகிய இடங்களில் உள்ள அனல் மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]